Wednesday, 22 November 2017

புதுமைப் பெண்கள்

புதுமைப்பெண்கள்

----------------------------
புதுமை பெண்கள் வேண்டும் என்றீர்
ஆணுக்கு நிகராய் சுதந்திரம் கேட்டீர்,

ஆணுக்கு நிகர் சலைத்தவர் இல்லை,
குடும்பத்தை சுமப்பது எங்கள் வேலையில்லை!

மாது மதுவுக்கும் வித்தியாசம் இல்லை,
மது, மாது ஆணை மட்டும் அழிக்கும்,

பெண்ணால் குடும்பமும் தழைக்கும்
மதுவால் மாது குடும்பத்தையும் அழிக்கும்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மானமுள்ள தமிழச்சி நாம்,
வீரமுள்ள பெண்கள் நாம்.

மானத்தை கூறுபோட்டோம்,
மதுக்கடையில் ஏலம் போட்டோம்,

ஜான்சி ராணி பிறந்த நாடு,
அன்னை தெரசா வளர்ந்தநாடு.

மதுவை அருந்திட தவிர்த்திடு,
மதுவை ஒழித்திட போராடு.

பெண்ணே நீயும் புறப்படு,
புதுமை பெண்ணாய் போராடு!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அச்சம், மடம், நாணம், உவகை
மேலும் சில பெண்ணின் குணம்,
கலாச்சாரம் நவீனமாயிற்று,
பெண்ணடிமை தொலைந்து போயிற்று,
உடலை மறைக்க தெரியவில்லை,
கேட்டால் புதுமைப் பெண்களாம்,
கண்டித்தால் பெண் உரிமை மீறலாம்,
வன்கொடுமை சட்டமாம்,
மதுக் கடையில வரிசையில் தாராளம்
குடியைக் கெடுக்கும் புதுமைப்பெண்கள்,
பாரதியும் இங்கே இருந்திட்டால்,
தலைக்குனிவு அவருக்கு நிச்சயம்
------------------------------------

No comments:

Post a Comment