Wednesday, 22 November 2017

இரட்டை நாக்கு

இரட்டை நாக்கு
___________________________
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
போற்றுவதற்கு ஒரு நாக்கு,
தூற்றுவதற்கு ஒரு நாக்கு,
இரட்டை நாக்கு இருப்பதாலே,
தூபம் போடும் மனிதனடா,

நம் முன்னாள் புகழ்ந்து பேசும்,
நம் பின்னாள் இகழ்ந்து பேசும்
நரம்பில்லை என்பதை காட்டும்
நன்றியை மறந்த இரட்டை நாக்கும்!

உலக உத்தமர் காந்தியின்
மகத்துவத்தை அறிந்திடாத,
தியாகத்தை தெறிந்திடாத
ஈனப் பிறவிகளின் நாக்குகளோ!
தாழ்த்தி பேசுவதை கண்டிடுவீர்,

ஒரு நாக்கில் அமிர்தத்தையும்,
மற்றொரு நாக்கில் விஷத்தையும்,
கலந்தே கூப்பிடுவதை நானறிந்தேன்,
வேலை முடியும் வரை அமிர்தமாய் பேசி,
வேலை முடிந்ததும் விஷமாய் பேசிடும்,
இரட்டைநாக்குகள் அவைகளடா!

வாக்குகள் கேட்கும் போது
உறுதிகளை கூறுவது ஒருநாக்கு,
வெற்றிப் பெற்றப் பிறகு,
பணம் வாங்கிக் கொண்டு தானே வாக்களித்தாய் என்கிறது மற்றொருநாக்கு,

தமிழ் மட்டுமே உயிர் மூச்சி என்கிறான்,
அவன் பிள்ளை படிப்பதோ
ஆங்கிலம்  என்கிறான்,
நினைத்ததை பேச ஒருநாக்கு,
மறந்ததை பேச ஒருநாக்கு,
இரட்டைநாக்கு இருந்திட்டால்
அழிவு உனக்கு நிச்சயமடா!
_________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment