கண்ணீர் பூக்கள்
- - - - - - - - - - - - - - - - - - -
என் கடந்த கால நினைவலைகள்,
தாயில்லாத பிள்ளை தர்தலை ,
கூறியது யாரோ?
என்னைப் பார்த்து கூறியது என் முற்றங்கள்,
அனுதாபமே வாழ்க்கையாய்
என் கண்ணில் கண்ணீர் பூக்கள்,
பிறந்தது தாய் வீட்டில்,
வளர்ந்தது தாய்மாமன் வீட்டில்,
ஆடு, மாடு எல்லாம் மேய்த்தேன்,
குழந்தை பருவ அனுபவம் கிட்டவில்லை,
என் கண்ணில் கண்ணீர் பூக்கள்,
நினைக்கையில் குழந்தையாய் வடிக்கின்றேன்!
பள்ளிப் பருவம்,
படிக்கத் தடையில்லை,
விடுமுறையை அனுபவிக்க முடியவில்லை,
வாரத்திற்கு ஞாயிறுக்கே கூட விடுமுறை,
அதனை நான் பார்த்ததில்லை,
அன்றுக் கூட வாயில்லாத உயிர்களிடத்தில்
எனக்கு மிகப் பெரிய வேலை -
இன்று நினைத்தால் கண்ணில்
கண்ணீர் பூக்கள் !
காலை நேரம் படிப்பு,
மாலை நேரம் விளையாட்டு,
நேரத்திற்கு சாப்பாடு ,
இதுக்கூட கிடைக்கவில்லை,
அன்று நினைக்கையில் கண்ணில் கண்ணீர்,
இன்று நினைக்கையில் கண்ணீர் பூக்கள்!
கல்விக் கற்பதே என் வேலை,
தடைகள் பல வந்ததும் அங்கே,
நிலாமுற்றம் போல சிலபேர்,
அந்த உதவியின் பலனே!
இன்று நிலவொளியாய் ஒளிர்கிறேன்,
நன்றிகளை நினைக்கையில்,
என் கண்ணில் கண்ணீர் பூக்கள்
-------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்.
No comments:
Post a Comment