Monday, 27 November 2017

கிராமியக் கவிதை

சேற்று வயலோரம்
சிந்திய புன்னகை(கிராமியக் கவிதை)
- - - - - - - - - - - - - - - - - - - - - -
பெ:
கொட்டாப் பாக்கு போட்ட மாமா
குனிஞ்சி நீயும் பொழப்ப பாக்க வேணாமா
நரி ஓடையில வெள்ளம் வர
வெள்ளாமைக்கு அணை போட வேணாமா

ஆ:
சேற்று வயலோரம்
சிந்தாத மழைத்துளியாம்
ஓடைத்தண்ணியிருக்க
உன் சிந்திய புன்னகைக்கு
என் பரிசு கண்ணீர் தானடி

பெண் :
கண்ணீரை வாரி வழங்க வேணாம்
வெள்ளாம  வெளைஞ்சிப்புட்டா
பாடுப்பட்ட சனத்துக்கு
மரக்கா கணக்கா கூலி கொடு
ஊரு வாழ்த்தும்
உறவும் வாழ்த்தும்
ஆசி கிடைச்சா போது மாமா

ஆ:
உள்ளம் நினைக்குதடி
கொடுக்க முடியலடி
வரியெல்லாம் போடுறாங்க
விலையேற்றம் இல்லையடி
வயல பக்கம் போனா
சேற்றையும் காணலடி
சேலம் பக்கம் மழை பெய்ய
நடுநாட்டுல வறட்சிய பாரு
ஆத்துல தண்ணீ போக
கிணறு வறண்டு கிடக்க
மழையும் பொய்த்ததடி
வெள்ளாம கிடைக்குமாடி

பெ:
ஆண்டவன் அருளிருக்க
ஆதங்கம் ஏனுங்க மாமா
நம்பிக்கை துணையிருக்க
ஆத்திரம் ஏனுங்க மாமா
மாரி பெய்திடும்
வயலில் சேரும் சகதியாகிடும்
நம் புன்னகையும் சிந்திடும் மாமா
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா









No comments:

Post a Comment