உன் நினைப்பில் பூத்தொடுத்தேன்
-------------------------
உன் நினைப்பில் பூத்தொடுத்தேன்
மாலைக் கூட உன் நினைவில்
தேனாய் சிந்து தடி,
கவிதைப் பூங்காவாய்,
கவியாய் கொட்டுதடி,
சந்திரன் வீட்டு சுந்தரியே,
கம்பன் தோட்டத்து மல்லிகையே,
மலர்கள் கூட்டத்தின் ராணியே,
காற்றில் அசைந்தாடும் தென்றலே,
உன் நினைப்பில் பூத்தொடுத்தேன்
மலர்கள் கூட நாணம் கொள்ளுதடி.
உண்ண மறந்தேன் ,
உறங்க மறந்தேன் ,
கனவுகள் களைய மறந்தேன்,
என்னை மறந்தேன் ,
என் முற்றத்தை மறந்தேன் ,
உன் நினைப்பில் பூத்தொடுக்கையில்
என்னை முழுதாய் மறந்தேன் ,
என்னை உணர்ந்தேன்,
என்னிலும் உன் காதலை உணர்ந்தேன்,
மனம் சிறகடித்து பறப்பதை உணர்ந்தேன்,
மின்னல் கீற்றிடுவதையும் உணர்ந்தேன்,
மனம் உன்னை தொடர்வதை உணர்ந்தேன்,
வருந்தும் என் உடலை உணர்ந்தேன்
உன் நினைப்பில் பூத்தொடுத்தேன்,
நான் யாரென்று உணர்ந்தேன்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment