Wednesday, 22 November 2017

இரவின் மடியினில் - 2

இரவின் மடியினில்
-----------------------------------------------------
ஊஞ்சலில் ஆடி வந்த மணிமேகலை,
அலையதில் அசைந்து வரும் வளையாபதி,
தத்துவத்தை தாங்கி வரும் சிலப்பதிகாரம்,
குண்டலத்தை தேடி வரும் குண்டலகேசி
கவி சிந்தி வரும் சீவகசிந்தாமணி,
ஐம்பெரும் காப்பியம் வழியில் நடந்திடுவோம்,
இரவின் மடியினில் அவைகளை
படித்திட நேரம் ஒதுக்கிடுவோம்.
----------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
இரவின் மடியினில்
....................................
கடல் மாதா தூங்கையில
அதன் மடியில் நீந்தையில
பல மைல் கடந்தே
மீன்களை பிடிக்கச் சென்றோம்,

நீல நிற கதிர்கள்
மறைந்து
நிலவொளியில்
கடல் நீர் தகதகக்க,
மீன்கள் துள்ளிக் குதிக்க
மகிழ்ச்சி கடலில் மூழ்கி
மீன்களை பிடித்து
இரவின் மடியினிலே
சுகமாய் மிதக்கின்றோம்!
________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்



No comments:

Post a Comment