Wednesday, 22 November 2017

பூவெடுத்து வைக்கனும் கூந்தலிலே !

பூவெடுத்து வைக்கனும் கூந்தலிலே !
-----------------------------------------
குழுவினர் :
தந்தானே தானே தானே
தந்தானே தானே தானே,
தானன்னா தந்தன்னா தானன்னா,
காதலன்:
பூவெடுத்து வைக்கனும் கூந்தலிலே,
அந்த அழக நானும் பார்க்கனும் பூங்குயிலே!
சேலைக் கட்டும் சிங்கார மயிலே,
நாணமாய் பேசிடும் கருங்குயிலே,
உன் மீன் விழி அழைக்குதடி,
மாமன் மனசும் துள்ளுதடி,
மாமன் பெற்ற மல்லிகைப் பூவே,
உன் அழகும் வீசுதடி,
பூக்கூட உன் கூந்தலில் சூடியதாலே!
வாடி என் கூட வெளியில
ஊரை சுற்றி பார்த்திடலாம்,

காதலி:
என் அத்தை பெற்ற ரத்தினமே,
தாலியை நீயும் கட்டிட
நேரம் இங்கு இருக்குதய்யா,
அதற்க்குள் ஊர் சுற்றிடனுமா!
கால நேரம் வர வேண்டும், இல்லாட்டி
ஊர் தவறாய் பேசிடுமே!

காதலன்:
உன் வாசம் என்னை இழுக்க,
என் பாசம் உன்னை அனைக்க
நீ வைத்த மீன் குழம்பும்
மாமனையும் மயக்கியதே!
கொஞ்சம் பக்கம் வந்து கட்டிக்கோடி,

காதலி:
வாசம் எல்லாம் ஒன்றும் இல்லை
மாமன் மேல் பாசம் அய்யா,
நீதான் என் உயிரும் அய்யா,
அதுவே எனக்கு வேண்டுமய்யா,
நேரம் வந்தா நீ என் கட்டுக்குள்ள

காதலன்:
வாசம் வீசும் தென்றலே,
உன் இதழை சுவைக்க ஆசையடி,
உன்னை வருட வேண்டுமடி,
காட்டுப்பக்கம் போயிடலாம்,
வாழ்க்கை கதையை பேசிடலாம்,

காதலி:
ஓடும் மீன் ஓடையில,
கொக்கும் காத்திருந்து பிடிக்கும் மாமா,
இப்படி நீயும் கூப்பிட்டால்
என் மனதை சிறையில் வைத்திடுவாய்,

காதலன்:
உவமையெல்லாம் கூற வேண்டாம்,
மாமன் மனசும் சுத்தமடி,
தங்க கட்டி நீயுமடி,
உரசி பார்க்க உரிமையும் இருக்குதடி,

காதலி:
உன் வேட்டியும் அங்கே காயுது,
மனசும் எங்கெங்கோ பாயுது,
நீ விரித்த வலையது,
மனதும் சிக்க தயங்குதய்யா,

காதலன்:
உன் தாவணி விலகி பார்க்குதடி,
மாமனையும் அழைக்குதடி,
வாடி புள்ள போயிடலாம்.
காத்தால வந்திடலாம்,

காதலி:
கிழக்கால கருத்திருக்க
நீயும் என்னை அழைத்திருக்க,
கிளிகள் எல்லாம் காதல் செய்திடுதே,
மனசும் தடுமாறிடுதே,

காதலன்:
எதற்கும் அஞ்ச தேவையில்லை,
தென்னந்தோப்பு போயிடலாம்,
இளநீர் அங்கே நீயும் குடித்திடலாம்,
நுங்கும் நானும் தின்றிடுவேன்,

காதலி:
ஆசையெல்லாம் அதிகம் மாமா,
நான் பொத்திவைத்த பதுமை மாமா,
செவ்வாழை எனக்கு வேண்டும் மாமா,
இன்னும் பழுக்க நாளிருக்கு மாமா

காதலன்:
கள்ளி நீயும் கொல்லாதடி,
காக்க வைத்து பாக்குறியே,
சில்லென்று சுடுறியே,
தாகம் தனித்திட  வாடி நீ
தாம்பத்யம் அறிந்திடலாம்...

காதலி:
பப்பாளி இரண்டும் காத்திருக்கு,
கனிந்து வர நேரம் இருக்கு,
ஆத்தங்கரைக்கு வந்திடய்யா,
ஆற அமர பேசிக்கலாம்.

குழுவினர் :
தந்தானே தானே தானே
தந்தானே தானே தானே,
தானன்னா தந்தன்னா தானன்னா,
- - - - - - - - - - - - - - - - - - -
                       அன்புடன்
            இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment