Wednesday, 22 November 2017

சமத்துவப் பொங்கல்

சமத்துவப் பொங்கல்
-----------------------------------
சாதிகள் தலைவிரித்தாடுது,
குழந்தைகள் மனதில்
நஞ்சாய் கலந்தது,
பள்ளி மாணாக்கரிடம்
வேர் விட்டு துளிர்க்குது,

எங்கும் சாதி, எதிலும் சாதி
ரத்தத்தில் கலந்தே கிடக்குது,
நஞ்சாய் மனிதனை கொல்லுது,
ஆண், பெண் சமத்துவமும் குலையுது,
அய்யகோ! என் ரத்தமும் கொதிக்குது.

தமிழர் பண்பாட்டை காக்கவேண்டும்
தமிழ் பாரம்பரியத்தை புதுப்பிக்க வேண்டும்,
தமிழ் நாகரிகத்தை வளர்க்க வேண்டும்,
வீரத்தை பறைசாற்ற வேண்டும்,

புறப்படடாத் தமிழா,
சமத்துவப் பொங்கல் வைத்தே,
சமத்துவத்தை காத்திடுவோம்,
சாதி, மத பூசல்களைக் கடந்தே,
மாணவர்கள் மனதிலே
நல்லெண்ணத்தை வளர்த்திடுவோம்,
ஒற்றுமையாய் இங்கே வாழ்ந்திடுவோம்

வேறுபாடுகள் பல உண்டு
அனைத்தையும் களையெடுப்போம்,
தமிழராய் பெயர் சொல்வோம்,
தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவோம்,
சூது, வாதை வென்றிடுவோம்,
பிரிவினை வாதத்தை வேர் அறுப்போம்,
நிம்மதியாய் வாழ்ந்திடுவோம்.
----------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment