மொழியிழந்து மவுனத்தில் துளிர்க்கிறது காதல்,
சங்கத் தமிழ் பூங்காவை போல
கவிதைகளாய் மலர்ந்திடும்
அதுவே காதல்,
கண்ணும் கண்ணும் சந்தித்த வேலை
உதிப்பது காதல்.
என் முதல் காதல், அதுவே உன் மீது
ஒரு தலைகாதல்,
நீ எதிரே வரும் போது இதயம்
துடிப்பது காதல்,
காலால் கோலம் போடும் போது
உன்னுள் உதிப்பது காதல்,
என்னைப் பார்த்த போது
உன்னுள் ஏற்படும் மாற்றம் அதுவே காதல்,
பட்டாம் பூச்சி பறந்திடும்,
பூக்கள் எல்லாம் உன் மீது கொட்டிடும்,
ஒளிகள் கூட உன் மீது பளிச்சிடும்,
வெட்கம் உன்னை தின்று விடும்
அதுவே காதல்,
மவுனமாய் பேசியே,
மவுனமாய் சிரிப்பது காதல்,
மொழிகள் கூட தேவையே இல்லை,
கண்கள் இரண்டும் இணையனும்.
மனம் இரண்டும் கூடனும்,
காதல் கவிதை இயற்ற தோன்றும்
உன்னை நானும் வர்ணிக்க வேண்டும்,
என்னை நீயும் உச்சி முகர வேண்டும்,
மடியிலே சாய வைத்து
கொஞ்சி கொஞ்சி பேசியே
தலையை கோதிவிடுவதே
காதல்,
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
மொழியிழந்து மவுனத்தில் துளிர்க்கிறது காதல்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment