இது ஒரு விவசாயி
பாடுவதுப்போல்
எழுதிருக்கேன்
..........................
ஒட்டுமில்லே
உறவுமில்லே
கட்டிக்கொள்ள
வேஷட்டியில்லே
வறுமையிலே
வாடுகின்றோம்
பாரத தேசத்திலே
காய்ந்துப்போன
வயல்களுக்கு
உழவன்விடும்
கண்ணிரப்பா
முக்கடவுள்
இருந்தும்கூட
எங்களை யே
காக்கலையப்பா
மாடாக
உழைத்துவிட்டோம்
ஓடாக இளைத்துவிட்டோம்
ஓட்டுப்போட்டு
மாட்டிக்கிட்டோம்
ஓயாமல் கேட்டுபுட்டோம்
குள்ளநாி
மனிதா்களிடம்
குத்தகைக்கு விட்டுபுட்டோம்
வாழவைத்த
தெய்வமெல்லாம்
நிா்வணமாக
அழையுதப்பா
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்தோம்
பொன்னம்மா இனி
உழைப்பதற்க்கு எங்கே
போவோம் சொல்லம்மா
ஆடடவித்து
மாட்டவித்து அழகான
வீட்டவித்து
அரகானி நிலத்தலே
ஆசைக்காக பயிா்
நட்டேன் செல்லம்மா
அடி அத்தனையும்
காய்ஞ்சுப்போச்சே
கண்ணம்மா
இனி
பிழைப்பதற்க்கு வேறே
வழியில்லையம்மா
வயலெல்லாம்
வீடாச்சு
வீடெல்லாம்
கடனாச்சு
வீட்டுக்கொரு
உயிா்போச்சு
வீதியெல்லாம்
பிணம்மாச்சு
கோமாளி ஆட்சியிலே
குரங்குகூட
சாகுதடி பொன்னம்மா
இந்தநிலை மாறிடுமா
கண்ணம்மா
ஏழைகளை காக்க
யாரும் இல்லம்மா
பொன்னுவிளையும்
நிலத்திலே மீத்தேன்
எடுத்தாச்சு
பிணங்களை புதைப்பதற்கு
வயல்களை கொடுததாச்சு
வட்டிபோடு
வாியைப்போடு
நடு இரவில்
சட்டம்போடு
மீத்தேன் மட்டும்
எடுக்காதே அரசே
நாங்கள்
பொங்கியெழுந்தால்
உங்கள் ஆட்சி
தருசே
வடநாட்டில்
இடமில்லையா
மீத்தேன் எடுக்க
தொியலையா
தமிழன்
நிலத்திலே
தீயை வைக்கிறே
உனக்கு நீயே
பாடைக்கட்டி
கொள்கிறாய்
கவிஞா்
பட்டுக்கோட்டை காதா்
No comments:
Post a Comment