Wednesday, 22 November 2017

இரக்கமில்லையா'

இரக்கமில்லையா!
- - - - - - - - - - - - - - - - - -
பெற்றோரை தவிக்க விட்ட மனிதா
உனக்கு இரக்கமில்லையா,
திருவோடு ஏந்தும் தந்தையை பார்த்தும்
நீ திருந்த மாட்டியா!
மனைவி வந்ததும்
தாய், தந்தையை மறந்து விட்டியா!
உன் பொக்கிஷத்தை  இழந்திடாதே!
விலைக் கொடுத்தாலும் கிடைக்காது
தாய், தந்தை உறவடா,
அனாதையாக்கி நிர்கதியாக்கினால்
பெற்றபாவம் உன்னைவிடாதடா!
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment