Thursday, 30 November 2017

விவசாயி பாடும் பாட்டு

இது  ஒரு  விவசாயி
பாடுவதுப்போல்
எழுதிருக்கேன்
..........................
ஒட்டுமில்லே
உறவுமில்லே
கட்டிக்கொள்ள
வேஷட்டியில்லே
வறுமையிலே
வாடுகின்றோம்
பாரத  தேசத்திலே

காய்ந்துப்போன
வயல்களுக்கு
உழவன்விடும்
கண்ணிரப்பா  
முக்கடவுள்  
இருந்தும்கூட
எங்களை யே
காக்கலையப்பா

மாடாக
உழைத்துவிட்டோம்
ஓடாக இளைத்துவிட்டோம்
ஓட்டுப்போட்டு
மாட்டிக்கிட்டோம்
ஓயாமல் கேட்டுபுட்டோம்

குள்ளநாி 
மனிதா்களிடம்
குத்தகைக்கு விட்டுபுட்டோம்

வாழவைத்த
தெய்வமெல்லாம்
நிா்வணமாக
அழையுதப்பா

உழைத்து   உழைத்து
ஓடாய்  தேய்ந்தோம்
பொன்னம்மா  இனி
உழைப்பதற்க்கு  எங்கே
போவோம்  சொல்லம்மா

ஆடடவித்து
மாட்டவித்து   அழகான
வீட்டவித்து

அரகானி நிலத்தலே
ஆசைக்காக  பயிா்
நட்டேன்  செல்லம்மா

அடி  அத்தனையும்
காய்ஞ்சுப்போச்சே
கண்ணம்மா
  இனி
பிழைப்பதற்க்கு  வேறே
வழியில்லையம்மா

வயலெல்லாம்
வீடாச்சு 

வீடெல்லாம்
கடனாச்சு

வீட்டுக்கொரு
உயிா்போச்சு

வீதியெல்லாம்
பிணம்மாச்சு

கோமாளி  ஆட்சியிலே
குரங்குகூட 
சாகுதடி  பொன்னம்மா

இந்தநிலை மாறிடுமா
கண்ணம்மா
ஏழைகளை  காக்க
யாரும்    இல்லம்மா

பொன்னுவிளையும்
நிலத்திலே     மீத்தேன்
எடுத்தாச்சு
பிணங்களை   புதைப்பதற்கு
வயல்களை  கொடுததாச்சு

வட்டிபோடு
வாியைப்போடு
நடு  இரவில்
சட்டம்போடு
மீத்தேன் மட்டும்
எடுக்காதே   அரசே

நாங்கள் 
பொங்கியெழுந்தால்
உங்கள்  ஆட்சி
தருசே

வடநாட்டில்
இடமில்லையா
மீத்தேன்    எடுக்க
தொியலையா

தமிழன்
நிலத்திலே
தீயை வைக்கிறே
உனக்கு   நீயே
பாடைக்கட்டி
கொள்கிறாய்

கவிஞா்
பட்டுக்கோட்டை     காதா்

Wednesday, 29 November 2017

தமிழ்ப் பயிரில் களையெடுப்போம்

தமிழ்ப் பயிரில் களையெடுப்போம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
செந்தமிழ் நம் தமிழ்
செம்மொழி எம் மொழி
பைந்தமிழ் நம் தமிழ்
தூய மொழி நம் மொழி

மூத்தக்குடி நம் குடி
முதுமொழி நம் மொழி
தீந்தமிழ் நம் தமிழ்
மொழிக் கெல்லாம் தலைமை மொழி

உயிருடன் கலந்தே
தமிழ் மீது கொண்டக் காதலால்
கவி இயற்றி பாமாலை சூடி
தமிழை நேசித்தோம்
தமிழன்னையை வணங்கினோம்

ஐம்பெருங்காப்பியம் தமிழின் குடும்பம்
பத்துப் பாட்டு மொழியின் குழந்தைகள்
தொல்காப்பியம் தமிழின் ஆனி வேர்
அறிவியலின் முதல் மொழி எம்மொழி

நம் மொழி நம் பெருமை
நமது இனம் பேரினம்
அழிப்பதிங்கே நடக்குமோ
அழிந்தால் தான் உலகு வாழுமோ!

சாதி கடந்தோம்
மதம் கடந்தோம்
தமிழால் இணைந்தோம்
தமிழராய் வாழ்வோம்

பிற மொழியை தவிர்ப்போம்
தமிழ் மொழியைக் காப்போம்
கலப்புகளை அகற்றியே
தூய தமிழில் பேசியே
களையெடுப்போம் தமிழ் பயிரில்
-------------------------
அன்புடன் வீரா

Tuesday, 28 November 2017

இந்த நொடி நகராமல் நின்றாலென்ன

இந்த நொடி நகராமல் நின்றாலென்ன
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கூந்தலின் ராணியே
உன் கைப்பிடித்து நடந்திட
ஆசை
கையை தொடும் வேளையில்
எட்டி நீயும் போனதேனோ!

கண்ணழகியே,
உன்னை என்றும்
எந்நேரமும்
கண்ணால் ஆராதிக்க ஆசை
பார்த்த நொடியில்
மறைந்து போவதேனோ!

தெற்றுப்பல்லழகியே,
முத்துப் பல்லை
ரசித்திட ஆசை
பேச முயன்றேன்
என்னை தவிர்த்து போனதேனோ!

நீயும் கானல் நீரோ
உதடுகளின் அசைவினை
சுவைத்திட ஆசை
உன் உள்ளத்தில் குடியேற ஆசை
எண்ணற்ற ஆசைகளை
நிராசையாக்கிச் செல்வதேனோ!

என் கனவு நாயகியே
கண்டேன் கனவினை
நினைவில் வாழ்கிறேன்
ஆசைகள் தீர்கின்றன
என் காதல் குறையவில்லை

அப்படியே !
இந்த நொடி நகராமல் நின்றாலென்ன
நான் கனவில் மட்டுமே
எந்நேரமும்
இருந்தாலென்ன!
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா




உணர்வு

உணர்வு
_____________
உணர்வுகள் உயிரின் அடையாளம்
உணர்ச்சிகள் உள்ளத்தின் வெளிப்பாடு
கிளர்ச்சிகள் மனதின் வெள்ளோட்டம்
மூன்றின் உச்சகட்டம் காதல்
- - - - - - - - - - - - - - - - - -

உயிரற்ற காதல்
- - - - - - - - - - - - - -
உணர்வுகள் உண்டென உன்னை நினைத்தேன்,
உயிராய் நினைத்த பாவத்தின் பலன்
இன்று
பொம்மையிடம் காதல் கொண்டேனோ
உணர்ச்சியற்ற உடலாகிப் போனேனே,

செண்பகப்பூ கண்ணழகி

கிராமியக் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - -
செண்பகப்பூ கண்ணழகி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
செண்பகப்பூ கண்ணழகி
சிங்கார கொன்டையழகி
குனிந்து நிமிந்து உழைக்கையில
கெண்டைக் காலு தெரியுதடி

நீ உலக்கை குத்தும் சத்தத்துல
மாமன்  இதயம் துடிக்குதடி
அம்மி அரைக்கும் அழகுலத்தான்
அத்தான் நெஞ்சம் கொதிக்குதடி

களையறிக்க நீ போனா
கற்கண்டாய் இனிக்குதடி
நடவு நட நீ போனா
நாக்கெல்லாம் வரளுதடி
நீ புல்லுக்கட்டு தூக்கி வர
உன் மாரெல்லாம் நனையுதடி

ஆடு மேய்க்க நீ போனா
காளை மாடா நான் உன்ன சுத்த
செவ்வந்தி பூ கணக்கா
அலுங்கி குலுங்கி நீ போற

தேன் கிண்ண கண்ணம் நீ
கடிச்சித் தின்ன நான் வறட்டா
அட அடிக்கரும்பா இனிக்குறியே
பாவக்காயா மொறைக்கிறியே
பக்கம் வந்தா ஏத்துக்குறேன்
தூரப் போனா நானும் போறேன்
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

திடீர் கவிதை

திடீர் கவிதை
- - - - - - - - - - - - -
நன்றியின் மறு உருவம்
நாய் என்ற ஈரெழுத்துக்கு பொறுந்தும்
நன்றியும், அன்பும் ஒரு சேரக் கிடைக்கும்
ஒரு நாள் வைத்த சோற்றிற்கு அது
காலமெல்லாம் நன்றியுரைக்கும் ,
என்னத்தான் உதவிகள் செய்தாலும்
உறவுக்கும் நன்றியில்லை
நட்புக்கும் தெரிவதில்லை
உதவிகள் செய்தோம் எதிரிகள் ஆனார்
நட்புக் கொண்டோம் துரோகம் இழைத்தார்
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

நூறு நாள் வேலை

காட்சிக் கவிச்சோலை
_________________________
அரசு வழங்கிய வேலை
நூறு நாள் வேலை
எல்லோருக்கும்  அரசு ஊதியம்
கையெழுத்திட்டாள் போதும்

காட்டு மேட்டை சமப்படுத்தி
ஏரிக்குளத்தை தூர் வாரி
ஆண் பெண் பேதமின்றி
கூடி உழைத்திடுவோம்

வியர்வைதனை சிந்திடுவோம்
நாட்டிற்காக உழைத்திடுவோம்
வேலைகளை பகிர்ந்திடுவோம்
சமபலத்தை காட்டிடுவோம்
இனிமையாய் வாழ்ந்திடுவோம்
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

புரிதலின்மை தரும் பிரிவுகள் - -

புரிதலின்மை தரும் பிரிவுகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்பு நண்பா  ......
சாதி பார்க்கவில்லை
மதமும் பார்க்கவில்லை
தொழில் ஒன்று தான்
குணத்தால் இணைந்தோம்

உணர்வுகளை மதித்ததாலே
சாதிகளை மறந்தோம்
உள்ளத்தால் இணைந்ததாலே
மதங்களை கடந்தோம்

யாரோ விட்ட ஏவுகணை
நல்ல நட்பை பிளந்தது
சாதி பெயரால்
செய்தாய் துரோகம்
என்னை நசுக்கிட நீ எடுத்த ஆயுதம் அது

உன்னால் பலரை எதிர்த்து நின்றேன்
சம பலத்தால் வெற்றியும் கண்டேன்
உன் புரிதலின்மையே
நம் நட்புக்கு எதிரியானது

உன் நட்புக்காக
பழைய நட்புக்களை உதறினேன்
உன் பிரிவால்
மீண்டும் பழைய நட்புக்கள் துளிர்ந்தது

புரியாமல் நீ முகநூலில் கருத்திட்டாய்
அதனால் உன்னிடம் விலகியிருந்தேன்
உன் செயல் தொடர்கிறது - உன்னை
நல்லவனாக காட்ட முயல்கிறாய்

நான் யாரென்று உலகம் அறியும்
நான் உன் நட்புக்களை
காவு வாங்கினேன் என்கிறாய்
புரியாமல் பிதற்றுகிறாய்,
ஆராய்ந்துப் பார், உண்மை தெரியும்

பிரிவு என்பது
என்னுடன் பிறந்தது
அதனால்தானோ என்னவோ
அன்பை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றேன்

உன் பிரிவு என்னை ஒன்றும் செய்திடாது
உனக்கு பெரும் இழப்பைத் தரும்
உன் செயல்களால்
உன்னை வெறுத்திடமாட்டேன்
என்றும் நட்பை நேசிப்பேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

Monday, 27 November 2017

சீறிப்பாயும் அருவியே

சீறிப்பாயும் அருவியே
- - - - - - - - - - - - - - - - - - - -
சீறிப்பாயும் அருவியே
உன் பிறப்பிடம் மலையோ
மலையரசியிடம் பிறந்தும்
சீற்றம் உனக்கு தேவைதானோ

பனிக்கட்டி உருகியே
அருவியாய் பிறந்தாய்
மலைகளில் தவழ்ந்தாய்
அருவியாய் அடிவாரத்தில் ஊற்றெடுத்தாய்

காடு, மேடு அலைந்தாய்
கழனியெல்லாம் புகுந்தாய்
தரணியெல்லாம் செழிக்கவே
சமவெளியில் தஞ்சம் அடைந்தாய்

நதியாய் மாறினாய்
நீயும் தாயானாய்
எத்தனை உயிர்களை  காக்கின்றாய்
ஏரி குளம் நிரப்பிடவே
சீறி வந்து சிறு கிளைகளாய் பிரிந்தாய்

உனக்கு பெயர்கள் தான் எத்தனையோ
கங்கை, காவிரி
பெண் பெயரிட்டு அழைத்தோம்
தெய்வமாய் வணங்கினோம்

ஐம்பூதத்தில் ஒன்றாம் நீ
அகிலத்தையும் காக்கின்றாய்
வேளாண்மையை செழிக்க வைத்தாய்
உன்னை போற்றிடவே
ஆடி பதினெட்டில் வணங்கிடுவோம்

பார் போற்றும் நதிகளை
பங்குப் போட
நாடகங்கள் நடக்கிறதே
அதில் எத்தனை அரசியல்கள்

பெருகி வருகையில்
சேமிக்க துப்பில்லை
தடுப்பணைகள் கட்ட வில்லை
உன் பெருமை அறியவில்லை

சீற்றம் கொண்டு வந்தாய்
வீணாக கடலில் கலந்தாய்
வறட்சி வந்தது
அருவியே உன் அருமை தெரிந்தது,
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா






எனையாளும் என்னுயிரே

எனையாளும் என்னுயிரே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எனையாளும் என்னுயிரே
என்னுள்ளே எப்படி நுழைந்தாய்
எந்தன் நெஞ்சில் ஏன் குடிக்கொண்டாய்
மனதை ஏனோ திருடிச் சென்றாய்

பந்தம் என்று வந்தாய்
சொந்தம் என்று சொல்லியே
வந்தனமாய் சந்தனமாய்
மனதிற்குள் மணந்தாய்

உயிராய் வந்தாள்
உறவாய் ஆனாள்
உரிமையை கொண்டாடினாள்
உள்ளத்தில் கலந்தாள் - புது
உலகை கொடுத்தாள்

என்னில் சரிபாதி அவள்
அவளின் சரிபாதி நான்
சிவன் சக்தியாக கலந்தோம்
சிறப்பாய் வாழ்வோம்

சிகரத்தை தொடவே
என்னை ஆட்டி வைக்கும் பாகன் அவள்
அவள் என் இதயத்தை ஆள
எனையாளும் என்னுயிரின் காவல் நான்
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா



ஒன்னும் ஒன்னும் ரெண்டு

ஒன்னும் ஒன்னும் இரண்டு
இரண்டு பட்டால் நண்டு
முன்னேறவும்  முடியாது
மேல் ஏறவும் விடாது
இரண்டு வேண்டாம்
ஒன்றாக இருப்போம்
ஒற்றுமைக் காண்போம்
----------------------
அன்புடன்
வீரா

கைதா(க்)கவா

கைதா(க்)கவா
- - - - - - - - - - - - - - -
சுட்டு விடும் பார்வையால்
சுடர் விடும் விழியினால்
அழகிய இமைகளால்
நெஞ்சத்தை கொள்ளையடிக்க  வா

இமைத்தென்னை சிறையில் வைத்தாய்
உன் கண்ணில் அடைக்கலம் ஆனேன்
கண்ணீர் கடலில் மிதக்கின்றேன்
கருவிழியில் என்னை சிறைவைத்தாய்

செவ்விதழ் உதடுகளால்
சிவந்த முத்தம் தந்தாய்
மயக்கம் தெளியும் முன்
தூக்கம் கலைந்தது
என் கனவையும் களவாடிவிட்டாய்!

கொடியிடை இடுப்பும்
அழகிய நளினமும்
மயில் தோகையாய் கூந்தலும்
இன்புற செய்கிறது
இத்தனை பரவசம் ஏனோ
உன்னில் விழுந்தேன்
என்னை கைதா(க்)கவா
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

கிராமியக் கவிதை

சேற்று வயலோரம்
சிந்திய புன்னகை(கிராமியக் கவிதை)
- - - - - - - - - - - - - - - - - - - - - -
பெ:
கொட்டாப் பாக்கு போட்ட மாமா
குனிஞ்சி நீயும் பொழப்ப பாக்க வேணாமா
நரி ஓடையில வெள்ளம் வர
வெள்ளாமைக்கு அணை போட வேணாமா

ஆ:
சேற்று வயலோரம்
சிந்தாத மழைத்துளியாம்
ஓடைத்தண்ணியிருக்க
உன் சிந்திய புன்னகைக்கு
என் பரிசு கண்ணீர் தானடி

பெண் :
கண்ணீரை வாரி வழங்க வேணாம்
வெள்ளாம  வெளைஞ்சிப்புட்டா
பாடுப்பட்ட சனத்துக்கு
மரக்கா கணக்கா கூலி கொடு
ஊரு வாழ்த்தும்
உறவும் வாழ்த்தும்
ஆசி கிடைச்சா போது மாமா

ஆ:
உள்ளம் நினைக்குதடி
கொடுக்க முடியலடி
வரியெல்லாம் போடுறாங்க
விலையேற்றம் இல்லையடி
வயல பக்கம் போனா
சேற்றையும் காணலடி
சேலம் பக்கம் மழை பெய்ய
நடுநாட்டுல வறட்சிய பாரு
ஆத்துல தண்ணீ போக
கிணறு வறண்டு கிடக்க
மழையும் பொய்த்ததடி
வெள்ளாம கிடைக்குமாடி

பெ:
ஆண்டவன் அருளிருக்க
ஆதங்கம் ஏனுங்க மாமா
நம்பிக்கை துணையிருக்க
ஆத்திரம் ஏனுங்க மாமா
மாரி பெய்திடும்
வயலில் சேரும் சகதியாகிடும்
நம் புன்னகையும் சிந்திடும் மாமா
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா









பிரியாத வரம் வேண்டும்

பிரியாத வரம் வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - - -
யார் என்று தெரியாது
பழகியதும் கிடையாது
பார்வையால் பேசியதும் இல்லை
பாவனைகள் காட்டியதும் இல்லை

நொடி பொழுதில் வந்தால்
தேநீரை கொடுக்கும் போது பார்த்தால்
அந்த நொடிகளில் கண்கள் பேசியது
மனதில் ஒளி வீசியது

மாப்பிள்ளையை பிடித்துள்ளதா?
உறவுகள் பெண்ணிடம் வினவ
ஆம் என்ற மெளன ஒலி பிறக்க
இரு குடும்பங்கள் ஒன்றாக
அவள் என் மனைவியாக
திருமண பந்தம் தாம்பத்யம் ஆக

கண்ணால் பேசி
கண்ணை கொண்டு குறிப்பறிந்து
வேண்டியதை செய்திடுவாள்,
இன்முகம் பூத்திடுவாள் என்னவள்
அவளை பிரியாத வரம் வேண்டும்
என் அன்னையே,
எனக்கு ஆசி வழங்கிட வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

Sunday, 26 November 2017

கவிச்சோலை

கவிச்சோலை
- - - - - - - - - - - - - -
பச்சை கானகத்தில்
பசுந்தளிர் கூடாரத்தில்
கூவிடும் குயில் கூட்டத்தில்
ஆடிடும் மயில் ஆட்டத்தில்
மலராய் மலர்ந்தவளே
தேன் மழையை சொரிபவளே
தீந்தமிழாய் மணப்பவளே
வண்ணத்துப்பூச்சி உன்னை
சுற்றுவதேனோ
உன் கண்ணில் காதல் தீ
பரவியது தானோ
அதற்கு காரணம் நான்தானோ
விடையை நீ தருவாயோ!
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

சீற்றம்

தமிழனை காப்போம்
- - - - - - - - - - - - - - - - - -
சீற்றம் கொண்ட சிங்க முகமாய்
புறப்படுத் தமிழா,
தொப்புள் கொடி உறவைக் காக்க
கடலை கிழித்துக் கொண்டு செல்லடா

சினத்தை வெல்வோம்
------------------------------------
சீற்றம் கொண்ட கடல் அலையாய்
சினம் கொள்ளும் மானிடா
கோபத்தை நீ கடந்து உள் சென்றால்
அமைதிக் கடலாய்  அருள் பாளிப்பாய்
------------------------
அன்புடன் வீரா

கார்த்திகை தீபம்

தீபங்கள்  பேசும்
திருக்கார்த்திகை மாதம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அடிக்குது அடிக்குது
சாரல் அடிக்குது
நடுங்குது நடுங்குது
உடலெல்லாம் நடுங்குது
சிலிர்க்குது சிலிர்க்குது
முடியெல்லாம் சிலிர்க்குது

ஐப்பசியில அடை மழை பெய்ய
கார்த்திகை மாதம் தீபமாய் மலர
தீபாவளி பட்டாசு  மீந்துக் கிடக்க
தீபத்தில் பட பட வென வெடிக்க
அண்ணாமலையில் தீபம் ஏற்ற

கரித்தூளும் காய்ந்து கிடக்க
காய்ந்த பனம் பூ துகளில்
கார்த்திகை தீபம் சுற்றுவோமே
தீப்பொறிகள் அழகாய் பறந்திடும்
தெரு முச்சந்தியில்
தீபங்கள் வளைவாய் சுழல
காளையர்கள் பதமாக சுழற்ற
கண்கொள்ளாக் காட்சியாக
கண்டிடும் இளஞ்சிட்டுக்களே

படம் காட்டும் ஆடவர்
அகலில் எண்ணெய் ஊற்ற
வெட்கப்படும் பெண்டிரும்
அகலில் தீபம் ஏற்ற
திருவிழா கோலாகலம்
குப்பையிலும் தீபம் மலரும்

கார்த்திகை மாதம் முப்பது நாள்
தீபங்கள் பேசிடும் மூன்றே நாள்
இரவில் மலரும் ஒளியாய்
திருக்கார்த்திகை தீபங்கள்
அழகாய் பேசிடும் பெண்களாய்
------------------------
அன்புடன்
வீரா

#அழகிய அன்பு

அழகிய அன்பு
- - - - - .---------------
அம்மாவிடம் அன்பை கற்றேன்
அப்பாவிடம் அறிவை கற்றேன்
நானே ராசா
நானே மந்திரி
என் ஆணை, என் கட்டளை
நீங்கள் பெற்ற பிள்ளை நான்
உங்கள் அன்பால் கருவாய் ஆனேன்
தாய்மை கிட்டியதால் குழந்தையானேன்

தாயை பிரிந்ததாலே
கோழிக்குஞ்சி என்னை சுற்றி வர
நான் இறைத்த சோற்று பருக்கை
கொத்தி தின்று பசியாறியதாலே
என்னை தாயாய் பார்க்கிறது
அன்பாய் காலை சுற்றுகிறது

கண்களை உருட்டி பார்க்கிறது
அதில் அன்பு தெரிகிறது,
தாயன்பை கண்டேன் நான்
தாயில்லா தவிப்பை அறிந்தேன்
உட்கார குடிசை இல்லை
தாயன்பில் மாளிகை கண்டேன்
உண்ண உணவில்லை
கோழிக்குஞ்சு பசியாறியதில்
நிம்மதி கண்டேன்

ஓவியத்தில்  அன்பை கண்டேன்
அன்னையின் பாசம் உணர்ந்தேன்
உள்ளத்தில் தெளிவை பார்த்தேன்
ஆத்மாக்களின் ஏக்கத்தில்
அழகிய அன்பை உணர்ந்தேன்
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா