Wednesday, 22 November 2017

எண்ணெய்க் குளியல்

எண்ணெய்க் குளியல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
பருவ காலம் மாற்றமாக,
மழைக்காலம் கோடையாக,
கோடையில் மழையாக,
நாள் எல்லாம் புகையாக,
மாசு மருவும் வந்ததே,
நாள் எல்லாம் ஒவ்வொரு நோயும்,
பரவியும் இங்கே வந்ததே!

பாட்டி வைத்தியம் மறைந்துப்போக
ஆங்கில மருந்தும் புண்ணியம் இல்லை,
உடல் சூட்டை தணித்துவிட்டால்,
நோயெல்லாம் நீங்கிடுமே!

வாரத்தில் இரண்டுநாட்களாம்
எண்ணெய் தேய்த்துக் குளித்திடனும்,
புதனும், சனியும் ஆண்மகனுக்கு,
செவ்வாயும் வெள்ளியும் பெண்மகளுக்கு,

தேய்த்து நீங்கள் குளித்திட்டால்,
புத்துணர்ச்சிக் கிடைத்திடுமே,
உடல் சூடும் பறந்திடுமே,
நோயின்றி வாழ்ந்திடலாம்,
முயற்சி செய்து பார்த்திடுங்கள்,
வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திடுங்கள்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்.

No comments:

Post a Comment