வாழ்க்கையில் தொலைந்து போனவர்கள்
பாசமாய் வளர்த்த தாத்தா, பாட்டி , உற்றார்,
பட்டியல் என்னவோ நீளமாய்,
பலரை தொலைத்து விட்டோம்
இளஞ்சிட்டு பருவ நட்புக்கள் எங்கே.
கூடி ஆடி காலத்தை கழித்தப் பருவத்திலே
சேர்ந்த நண்பர்கள் எங்கே,
ஆடு மேய்க்கையிலே
கூடிய நண்பர்கள் எங்கே,
பள்ளிக்கால தோழர்கள் எங்கே,
கல்லூரிக் கால தோழிகள் எங்கே,
எங்கோப் பிறந்து எங்கோ வளர்ந்து
ஒரு மரத்துக் கிளிகள் ஆனோம்,
ஆட்டம் என்ன,
பாட்டம் என்ன,
கொண்டாட்டம்தான் என்னே!
அன்பு, பாசம், எல்லாம் நிரந்தரமில்லை
அனுபவத்தில் உணர்ந்தோம்.
நம் வாழ்க்கைக் காலம்
பருவக்காலமாய் மாறியதே,
அந்த அந்த பருவத்தில்
இடையில் தொலைந்தவர்கள் பலர் உண்டு,
ஒரு சிலவற்றை
ஏனோ மறக்க முடியவில்லை - அவை
இதய சுவற்றில் மோதும் நினைவலைகள்.
-----------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 5 November 2017
வாழ்க்கையில் தொலைந்த
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment