துரோகி சிற்பியானான்
____________________________
கடகடவென ஒடுது ரெயில் - அது
2 தண்டவாளங்களின் நேர்கோடு
பலரின் வியர்வை கோடு,
பின்னாள் வருபவர் என்னை தொட தொட
ஒடுகிறது என் வாழ்க்கையின் பாடு
அது எனக்கென நானே போட்ட ரோடு
சென்ற வரெல்லாம் திரும்பி, பார்க்க
பின்னாள் வருவானா? வர மாட்டானா?
என நினைக்கையில்
அந்த நொடியினில் கடப்பவன் எவனோ? அவனே நான்,
தூற்றுவதும், போற்றுவதும் மற்றவர் வேலை
அதனை செவி தன் போடாதது என் வேலை,
உன்னை பார்த்து நான் வாழவில்லை'
பின் ஏன் எனை பார்த்து கேளிக் கூத்து
நான் என் வழியே செல்ல
உங்கள் வன் சொற்கற்கள் எனை தாக்குவதேன்,
அடிபணியேன் உன் வஞ்சகத்திற்கு,
கீழ் படியேன் உன் ஆணவத்திற்கு,,
பின் முதுகிட்டு பேசும் உனை
ஒரு போதும் நான் மதிக்கலேன்,
துரோகம் இழைத்தாய் நட்புக்கு
அன்பாய் பண்பால் இருந்திருந்தால்,
நான் உன் சேவகன்,
நீ இழைத்த துரோகத்தால், வன் சொற்கற்களாய் வீசினாய், உன் கல்லெறிப் பட்டே நான் முழு உருவமானேன்,
நீ சிற்பியானாய்?
துரோகியை கூட புகழ்ந்து தான் பழக்கம்
அன்பான மணிதனுக்கு
Wednesday, 22 November 2017
துரோகி சிற்பியானான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment