Wednesday, 22 November 2017

மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்
-------- ---------------------------
ஆடையின்றி திரிந்தக் காலம்
உடுத்த உடையை கண்டிட்டான்,
பச்சை உணவை உண்ட அவன்
சிக்கி முக்கி கற்களால்
நெருப்பையும் கண்டெடுத்தான்,
உணவை சமைத்தே சாப்பிட்டான்
நடந்தே திரிந்த அவன்
சக்கரத்தை கண்டெடுத்தான்,
போக்குவரத்தை ஏற்படுத்த
விலங்குகளை பயன்படுத்தினான்,
தனித்தனியாய் வசித்த அவன்
கூட்டுக் குடும்பமாய் வசித்திட்டான்,
வேளாண்மைக்கு வித்திட்டான்,
கூடவே செயற்கை என்ற விஷத்தையும் கலந்திட்டான்,
தன் தேவைதனை தானே செய்தான்,
மரத்தையெல்லாம் வெட்டினான்,
கழனியை வீடாய் மாற்றினான்,
இயந்திரமையத்தைக் கொண்டு வந்து
உலக அழிவுக்கு வித்திட்டான்! உலகம் மாற
மனிதன் அவன் மாறி விட்டான்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment