Wednesday, 22 November 2017

மழை வரும் நேரம்

மழை வரும் நேரம்
----------------------------
மழை வரும் நேரம் தெரியவில்லை,
பட்டம் போட்டு நடும் காலமும்  அறியவில்லை,
ஆடிப்பட்டம் தேடி விதைத்தோம்,
இப்பொழுது மழைக்காக காத்திருந்தோம்.

கார்த்திகை மாதம் வெய்யில் அடிக்குது,
சித்திரை மாதம் மழையும் கொட்டுது,
ஆடி மாதம் பனியும் பொழியுது,
பங்குனி மாதம் காற்றும் அடிக்குது,

காலம் எல்லாம் மாறிப் போச்சு,
பருவ காலம் தவறிப் போச்சு,
தண்ணீர் நிலத்தின் மேலே பொங்கி போச்சு,
இப்பொழுது நிலத்தடி நீரும் குறைந்துப்போச்சு,

ஏற்றம் இறைத்து பயிர் செய்தோம்,
கிணறும் இப்பொழுது வறண்டு போச்சு,
நிலமெல்லாம் வெடித்துப் போச்சு,
பட்டக்கடன் பாழாய் போச்சு,

சோதித்தது போதும் இறங்கி வா மாரியே!
தற்கொலையும் நடக்குது,
பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுது,
பூமி குளிர பெய்திடம்மா,
கரை புரண்டு ஓடிடம்மா,
பொங்கல் பொங்க நெல்மணியில்லை,
பொங்கல் வைத்து அழைக்கின்றோம்,
ஓடி நீயும் வந்திடம்மா,
உழவர்களை காத்திடம்மா.
____________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment