Wednesday, 22 November 2017

நெஞ்சுக்குள்ளே உன்னை

நெஞ்சுக்குள்ளே உன்னை
- - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்திருக்க ஆசை,
காலமெல்லாம் உன்னோடு சேர்ந்து வாழ
ஆசை ,
பாசமுள்ள உன் நெஞ்சுக்குள்ள நான் குடியிருக்க ஆசை,
காதல் கோட்டை ஒன்று நாம் சேர்ந்து
படைத்திட ஆசை ,

பட்டாம்பூச்சி பிடிக்க ஆசைப்பட்டேன்,
துள்ளித் திரிந்திட நான் ஆசைப்பட்டேன்,
பருவமடைய நான் ஆசைப்பட்டேன்,
என் மாமனை நெஞ்சுக்குள்ளே வைத்திட ஆசைப்பட்டேன்,

சின்ன சின்ன ஆசைகள்,
கிளிகளாய் மாறி காதல் செய்திட ஆசைகள்,
புறாக்களாய் நாங்கள் மாறியே,
ஊர் ஊராய் சுற்றவும் ஆசைகள்,
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து
சுமந்திடும் ஆசைகள்,

முதல் குழந்தை எனக்கு நீயுமே!
நான் செய்திட்ட வரத்தின் பயனுமே,
பத்து மாதம் சுமக்கவில்லை,
நெஞ்சில் வைத்து சுமக்கின்றேன்!

என் அத்தைப் பெற்ற ரத்தினமே,
மாமன் பெற்ற மரகதமே,
கடவுள் கொடுத்த மாணிக்கமே,
நான் சுமக்காமல் பெற்ற தங்க ரதமே,
தெய்வத்திடம் ஒரு வரம் கேட்டேன்,
உன்னை என்றும்,
நெஞ்சுக்குள்ளே சுமந்திட வேண்டும் என்றேன்,
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment