Sunday, 30 September 2018

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி
-----------------------
பாரதத்தின் பிதா
உலகின் உத்தமர்
கத்தியின்றி ரத்தமின்றி,
வெள்ளையனை வெளியேற்றி
சகாப்தம் படைத்தார்
விதியை மாற்றினார்.
சரிதம் எழுதி
சுயம்புவாய் வாழ்ந்தார்.
குண்டடிப் பட்டார்,
மகுடமாய் மறைந்தார்!
- - - - - - - - - - - - - - - - - -
வீரா

முகத்தின் மறுபக்கம்

முகத்தின் மறுப்பக்கம்
----------------------------------
சாந்தம் தெரிவது முகம்
அதிலே அகத்தின் அழகும் தெரியும்,
புறத்தின் புதுமையும் அறியும்,
கண்ணிலே அமைதியை காட்டி
வஞ்சகம் செய்கிறது ஒரு முகம்,
வாயிலே புண்ணகை ததும்ப
மனதிலே சுட்டெரிக்கிறது மறுமுகம்.
இனிக்க இனிக்க பேசி
புளியை கரைக்கிறது ஒரு முகம்,
அளந்து அளந்து பார்த்து
எடை போட்டுப் பார்க்கிறது மற்றொரு முகம்,
மறுப்பக்கத்தில்தான் எத்தனை கிறுக்கல்கள்!

____________
அன்புடன்
வீரா