Wednesday, 22 November 2017

தொடரும் பயணங்கள்

தொடரும் பயணங்கள்
------------------------------------
நாகரிக கோமாளியாய் பயணித்த மனிதா!
உன் பயணங்கள் தொடர்கிறது,
உடையின்றி திரிந்தாய் நீ !
செடி, கொடிகள் உன் உடையாய் ஆனது,
பச்சையாய் உண்டாய் அந்தக்காலம்,
சிக்கிமுக்கி கற்கலால் நெருப்பைக்கண்டாய்,
சமைத்து உண்டாய் அது கற்காலம்.
சுழலும் சக்கரம் கண்டெடுத்தாய்,
பயணத்தை நீயும் தொடர்ந்திட்டாய்,
வேளாண்மை நீயும் செய்திட்டாய்,
நல்ல பயணத்தை வித்திட்டாய்,
கணினிக் கூட பேசுகிறது,
இணையம் வழியால் உறவாடுகிறது,
உள்ளங்கையில் உலகமடா!
உலகம் சுருங்கி போனதால்,
கண்டம் விட்டு கண்டம் பாயும்,
ஏவுகணை நீயும் படைத்திட்டாய்!
வேறு உலகை கண்டிட்டாய்,
குடியேறவும் துணிந்திட்டாய்,
உன் பயணங்கள் தொடர்ந்திடவே,
வாழ்த்துக்கள் கூறும் உள்ளமடா!
அனுபவ அறிவை பெற்றிடுவாய்,
உன் பயணத்திற்கு ஏது எல்லையடா!
_______________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்.

No comments:

Post a Comment