நாற்றாங்கால்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
குழந்தை அது - நாற்றாங்கால்
கண்ணும் கருத்துமாய் பாத்துக்கோ,
ஆடு மாடு மேய்ந்திட போகுது,
அப்புறம் வருட கணக்கில் பட்டினி தான்.
உரம் போட்டு வளர்த்துக்கோ,
வேப்பெண்ணெய் தெளித்து,
நோய் தாக்காம பாத்துக்கோ!
களையெல்லாம் பிடுங்கிக்கோ!
ஏறு ஓட்டி நாத்த நட்டு வளர்த்திட்டால்.
வெள்ளாமை கொழிக்குமடா!
ஊரே தழைக்குமடா,
பஞ்சம் பறக்குமடா!
புள்ளைய பெத்தா கண்ணீரு,
தென்னம் பிள்ளைய வைத்தா தண்ணீரு.
நாற்றை கூட தன் பிள்ளையாய்
மகனாய் தான் வளர்த்தெடுத்தான் - விவசாயி!
மகனை வளர்தெடுத்தான்,
முடிவில் காப்பகம் தான் அவன் வீடு.
நாற்றாங்காலை தன் மகன்களாய் -
வளர்த்தான்.
மகன் வீடும் அவன் வீடல்லவா இன்று!
இளம் நாற்றாக
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment