கவியரங்கம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தமிழ் வணக்கம்!
என்னைப் பெற்றெடுத்த தமிழே,
உனக்கே என் முதல் வணக்கம்.
அதன் பிறகே என் தொடக்கம்.
அமிழ்தினினும் இனியவளே!
என் மூச்சாக இருப்பவளே,
மொழிக்கெல்லாம் மூத்தவளே,
கவிஞர்கள் பலரை படைத்தவளே,
நான் கவி இயற்ற அருள் புரிவாயாக!
----.- - - - - - - - - - - - - - - - - - - - - -
தலைமைக்கு வணக்கம் :-
கவியின் கவி தாயி நீயே!
தமிழின் புதல்வியும் நீயே!
அன்னையின் அணிகளனும் நீயே!
பார் போற்றும் தரணியும் நீயே!
நான் வணங்கும் தலைமையும் நீயே!
_ - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சபை வணக்கம் :-
கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவிபாடும்,
நிலாமுற்றம் குழுமமும் கவி படைக்கும்,
ஆலமரமாய் நிலாமுற்றம் மாறன்,
விழுதுகளாய் கவிஞர்கள் வீற்றிருக்கும்
மகா சபை தனில் கவிப் படைக்கும்
இந்த கிறுக்கனின் மாபெறும் வணக்கம்!
- - - - - - - - - - - - - - - - - -
பொதுத் தலைப்பு :-
எனக்கு கொடுத்ததோ பொதுத்தலைப்பாம்
துன்பத்தில் தோள் கொடுப்பவர் யாரோ,
நான் தேர்வு செய்தது,
மனைவி என்ற உபத் தலைப்பாம்.
துணைத் தலைப்பு :-
மனைவியின் கவியரங்க கவிதை.
மனைவி அமைவதெல்லாம் வரம்
உயிர் கொடுத்தது பெற்றோர் - அந்த
உயிரினில் கலந்தவள் மனைவி,
உயிரை காப்பதும் மனைவி!
முகம் சோடையடித்த தென்னவோ உண்மை
அதை கண்டறிதலே அவளின் வல்லமை .
பார்வையறிந்து குறிப்பாய் அறிவாள்,
தோழியாய் மாறிடுவாள் - அவள்என்
துயரையும் துடைத்திடுவாள்,
ஓர் நாழிகையில் கண்டும் காணாமலும்
மணமுடித்தவள் என்னுடன்,
குணம் அறிந்து மனம் அறிந்து நடந்திடுவாள் என் மனைவி
உடல் சுகம் மட்டும் இல்லை
பசுந்தமிழையும், பைந்தமிழையும்
ஊட்டிடும் பாவை அவள் !
எனக்கு வரும் துன்பத்தையும்
பனித்துளியை அகற்றும் ஆதவன் அவள்!
நன்றியுரை:-
மனைவிக்கு சரிபாதி இடம்
கொடுக்கும் கவியரசுகளுக்கு நன்றி!
கவிப் படைக்க தளம் அமைத்த
முத்துப்பேட்டை கண்டெடுத்த முத்து விற்கும் நன்றி,
என் வரிகளையும் வாசித்திடும்
கவி சிற்பிகளுக்கும் நன்றி!
அன்புடன்
பொண்டாட்டி தாசன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment