திடீர் கவிதை
- - - - - - - - - - - -
ஆயிரம் காலத்து பயிர் நான்
பரம்பரைகளை பல கண்டவன் நான்,
என்னில் அடைக்கலம் புகுந்த உயிர்கள் பல,
அவைகள் குடும்பம் நடத்திய கதைகள் பல,
எந்நேரமும் மழலைச் சத்தம்,
காதல் கொஞ்சி விளையாடும் பறவைகள்,
தளிராய் இருந்த நான் பட்ட மரமானேன்,
இன்று ஆதரவற்று நிர்கதியானேன்!
- - - - - - - - - - - - - - - - - - - -
திடீர் கவிதை
- - - - - - - - - - - - -
என்இலைகள் எங்கே,
என்கிளைகள் எங்கே,
இளைப்பாரும் மனிதர்கள் எங்கே!
கொஞ்சிப்பேசிய பறவைகள் எங்கே!
அய்யகோ!
நான் பட்ட மரம் ஆனேனா?
பூச்சிகளும் வண்டுகளும்
என் உடலை சிதைக்கின்றதே
நன்றியை மறந்த மரங்கொத்தி
வெந்தப்புண்ணில்
வேல் பாய்ச்சுகிறதே,
நன்றிக்கெட்ட மனிதர்களால்
நான் இந்த கதி ஆனேனே!
______________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment