Wednesday, 22 November 2017

கலங்காதிரு மனமே

கலங்காதிரு மனமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
கயவர்களின் சூது வாதை
உடைத்து நாம் எறிந்திடலாம்
கலங்காதிரு மனமே,

பாரம்பரியம் அது பண்பாடு
அழிய விடமாட்டோம்
கலங்காதிரு மனமே,

ஜல்லிக்கட்டு ஒன்றும் புல்லுக்கட்டும் இல்லை
புரிய வைத்திடுவோம்
கலங்காதிரு மனமே,

வீரம் விளைந்த மண்ணு இது
மாற்றான் உரைக்கு பதில் கூறிடலாம்
கலங்காதிரு மனமே,

நாட்டு மாட்டை அழிக்க
கூத்தும் இங்கே நடக்குது,
நாட்டு இனம் நம்ம இனம்
சிங்கமாய் வீறுக் கொண்டெழுந்திடுவோம்
கலங்காதிரு மனமே,

வாய்க்கிழிய பேசிடும்
அரசியல்வாதி கூச்சல் இங்கே பலிக்காது,
எதிர்த்து நாம் நின்றிட்டால்
பருப்புக் கூட வேகாது
கலங்காதிரு மனமே,

ஜல்லிக்கட்டை நடத்திடுவோம்
தடைஅதை உடைத்திடுவோம்,
சட்டம் எல்லாம் நமக்கேது
வீறுக்கொண்டெழுந்திடுவோம்

காளையை நாம் அவுத்து விட்டு
ஏறுத் தழுவி பார்த்திடுவோம்,
பாடம் அதை புகுத்திடுவோம்,
தேர்தல் வரை பார்த்திடலாம்,
எதிரிகளை வீழ்த்திடலாம்
பொறுத்திருந்தால் சாதிக்கலாம்
கலங்காதிரு மனமே,

தமிழர்கள் கலங்குவது ஈனச் செயல்
ஜல்லிக்கட்டை நடத்திட்டால் வீரச்செயல்
புறப்படடாத்தமிழா
வென்றிடலாம் தமிழா
வெற்றி நமக்கே, கலங்காதிரு மனமே!
------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment