தூது போ வெண்புறாவே!
- - - - - - - - - - - - - - - - - - - -
நீயும் தூது போ வெண்புறாவே!
கலிகாலம் பிறந்தது,
இயற்கை அன்னையும் சிதைந்தது,
பூமாதேவியும் வெகுண்டெழுந்ததால்
நிலநடுக்கம், சுனாமியெல்லாம் வந்தது,
கொத்தாய் மக்களை வீழ்த்தியது,
சமதர்மம் தொலைந்தது,
சமநீதி அழிந்தது,
தீண்டாமையும் விளைந்தது,
மத பூசல்கள் துளிர் விட்டது,
மொழிகள் கூடப் பிரச்சினையாய்,
இனமும் கூட சச்சரவாய்,
கடவுள் பெயர்களில் கூட பிரச்சினைகளாம்,
விளைந்து இங்கே கிடக்குது.
தண்ணீருக்கும் பிரச்சினை,
உணவுக்கு இங்கே பஞ்சமாம்,
தரணியெல்லாம் காயுது!
மழையும் பொழிய தயங்கியது,
பஞ்சமும் தலைவிரித்தாடுது,
பசியால் குழந்தைகள் மாண்டது,
நிலமும் காய்ந்து கிடக்குது,
விவசாயி கண்ணீரும் வடிக்கிறான்,
கடனும் கழுத்தை நெறித்ததால்
தற்கொலையும் இங்கே நடக்குது,
இந்த துன்பங்கள் எதுவும் நடக்காமல்
தடுத்திடவே,
இயற்கை அன்னையை சாந்தப்படுத்திட
தூதாய் நீயும் சென்று
கடிதம் கொடுத்திடு வெண்புறாவே!
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
தூதுப் போ வெண் புறாவே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment