Wednesday, 22 November 2017

காணாமல் போன காதல்

காணாமல் போன காதல்
- - - - - - - - - - - - - - -
காணாமல்போன என்காதல் எங்கே,
நீகூறிய ஒரு வார்த்தையில்
உன்னோடு கனவு கண்டேன்
காதல் வளர்த்தேன்.
காலங்கள் கடந்தது ,
காதலும் அதுகசந்ததது,

தொட்டும்தொடாமலும் பேசிய தருணம்,
உரசியும்உரசாமல் சென்ற தருணம்,
கள்ளிச்செடி ஒரத்தில்
நளினி நீயும்நானும் பதுங்கியே,
காதல் பாடம் படித்தோமே!

வேர்க்கடலையும், இனிக்கும் கரும்பையும்,
தின்றுவிட்டு போட்ட குப்பையெல்லாம்
நம் நினைவாய் கிடக்குதடி,
கருவை மரத்தில் எழுதிய
நம்பெயர்களும் வடுவாய் மாறிபோனது!

பனைமரத்தில் ஏறியே,
நண்டுவாக்கிளி கடித்திடவே,
வலியை நானும் பொறுத்துக்கிட்டு
பதநீரும் இறக்கி கொடுத்தேனடி,
பதமாநீயும் குடித்துவிட்டு,
சுகமாய்நீயும் சென்றுவிட்டாய்.

மாற்றானை நம்பி சென்றாயே,
என்னை விட உயர்ந்தவன்எனில்
நீஎன்னை மறப்பாய்,
என்னிலும் தாழ்வானவன் எனில்
என்னை நினைப்பாய் அப்பொழுது,
உன்னை என்றும் வாழ்த்திடுவேன்,
உன்உண்மை காதலன் நான்
--------------------------------
                    அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment