ஏனிந்த நாணம்
- - - - - - - - - - - - - - - - - - - - -
ஆதவனை பார்த்த முல்லைப்பூவாய்
மலர்ந்தவளே!
முழுமதியைப் பார்த்த செந்தாமரையாய்
மறைந்தவளே!
மாமனை பார்த்த ரோசாப்பூவே!
ஏனிந்த நாணமோ !
உன்னை தழுவிச் செல்லும் ஓடை நீரும்
உன் நாணத்தால் மெய்மறந்து போனதே!
அதனைக் கண்ட உன் மாமன் நினைவில்
நாணத்தின் முகம் அதை கண்டேனே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்'
No comments:
Post a Comment