வேரில் பழுத்த பலா
_______________________________
சங்கத் தமிழ் கவிதை பூங்கா - இங்கு
செம்மொழியை படைத்திட்டால்,
தேனாறும் பாலாறும் இங்கு ஒடும்,
பொதிகை மலைச் சாரலும்
தென்றலாய் வீசும், பழந்தமிழாய்,
வைகையும் தாலாட்டு பாடிடும்,
குயில்களின் கூட்டமும் கூவி விடும்,
மயில்களும் அழகாய் ஆடிடும்,
தேன் சிந்தும் தூரிகை மலரப்பா - இது
தேனிக்கள் நாடிடும் இடமப்பா,
சிறியவர், பெரியவர் இங்கு இல்லையே!
ஆண் பெண் பேதமும் இல்லையே!
சாதிகள் பெயரும் ஒழிந்து போகும்,
எங்கள் சாதி பாவலர் சாதி,
எங்கள் கவிகளை நீவிர் அருந்தினால்,
வேரில் பழுத்தப் பலாவை போல
தேனாமிர்தமாய் இனித்திடுமே,
வேரில் பழுத்த பலா உடைந்துவிட்டால்,
வாசனை மூக்கை துளைத்திடுமே,
அதையும் நீங்கள் அருந்திவிட்டால்,
செந்தமிழின் சுவையை அறிந்திடலாம்.
சங்கத் தமிழ் கவிதை பூங்கா - அதில்
வேரில் பழுத்த பலா அதிகம் கிடைத்திடுமே,
முகநூல் நட்புகள் சுவையாறிடலாம்.
________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
வேரில் பழுத்த பலா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment