Wednesday, 22 November 2017

புத்தாண்டு

புத்தாண்டு
- - - - - - - - - - - - - - -
12 மாதம் கழித்து பிறந்த புது நிலாவே வா !
ஏழைகள் ஏற்றம் கண்டிட - புத்தாண்டே
பொங்கியெழுந்து வா!
மாற்றங்கள் தரும் மரகதமே வா!
ஏற்றங்கள் தந்திட டிசம்பரை கடந்து வா!
சாதியை ஒழிக்கப் புறப்பட்டு வா,
மத பூசலை கலைக்க ஓடோடி வா!
சரித்திரம் சில பல படைக்க வா!
சிவப்பு கம்பளத்தில்
செங்கதிரவனாய், சுடர் ஒளியாய்
பட்டொளி வீசி பறந்து வா,
உனக்கு குடியரசும் உண்டு.
சுற்றி சுழல சுதந்திரம் உண்டு.
காதல் செய்ய பிப்ரவரியும் உண்டு,
கொஞ்சி பேசிட உன் குழந்தை - நவம்பரும் உண்டு.
கல்வி கற்க ஆசிரியர் உண்டு.
உன்னை கடந்து செல்ல நாங்களும் உண்டு,
உற்றார் உண்டு, உறவினர் உண்டு
ஓடி வா , புத்தாண்டே வா !
                             அன்புடன்
            விருத்தாசலம் இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment