எங்கே நிம்மதி!
- - - - - - - - - - - - - - - - -
தந்தையின் உதிரத்தின் உதவி -அது
என் அன்னையின் தாய்மை.
கர்ப்ப பையில் உதித்ததின் தூய்மை
பூமியை கண்டதில் இருந்து தேடுகிறேன்,
மழலையாய், குழந்தையாய், மாணவனாய்
வாலிபனாய் முதிர்ந்து விட்டேன்,
இன்னும் தேடி கொண்டிருக்கிறேன்!
சில பல இடங்கள் தேடியும் கிடைக்கவில்லை,
எங்கும் போட்டி, எதிலும் பொறாமை
சுயநலம் மட்டுமே,
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை .
உடன் பிறந்தோரிடம் பகைமை
உறவுகளிடம் வெறுமை
பள்ளிக்கூட நேரமா? கல்லூரி காலமா?
நான் கனாக் கண்ட அந்த நிமிடமா?
தோழி காதலியான தருணமா?
மனைவி அமைந்த வரமா?
தேடி திரிந்தும் கிடைக்குமா! அந்த நிம்மதி
உறங்கும் இடத்திலும் இல்லை,
கனவிலும் காணவில்லை'
நான் உதித்த அந்த
கருவறையில் கண்டேன்
என் நிம்மதியை,
கருவறையை தவிர வேறெங்கும் இல்லை
நிம்மதி பத்து மாதங்கள் மட்டுமே!
மீண்டும் கருவறையில்
நிம்மதியை தேடுகிறேன்....
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment