திரும்பிப் பார்க்கிறேன்
- - - - - - - - - - - - - - - - - - - -
எந்த இடத்திற்குச் சென்றாலும்
வந்த இடத்தை மறக்காதே,
திரும்பிப் பார்க்கிறேன் நான்
பத்து மாதம் சுமந்த தாயுண்டு,
நான் அனாதையும் இல்லை,
ஆனால் ஐந்து வயதில் அனாதை ஆனேன்,
உற்றார், உறவுகள் உண்டு,
எனக்கு ஓர்தங்கையும் உண்டு,
தாய்பாசம் என்னவென்று அறிவதற்க்குள்,
காலன் தாயை அழைத்தான்,
நானோ தாய்வீட்டு பாட்டி வளர்ப்பில்,
தங்கையோ வேறு ஓர்தாயின் வளர்ப்பினிலே,
பஞ்சத்தை நேரில் பார்த்த உயிரும்நான்,
பசியைக் கூட உண்டு களித்த பாவிநான்,
படிக்கக் கூட பணமில்லை,
பேருந்துக்கு செல்ல நாணயம் இல்லை,
நடந்துக் கூட தேர்வுக்கு போனேன்,
பள்ளிக் கல்வியை முடித்துவிட்டேன்,
கல்லூரி கனவு நினைவாக,
நல்ல உள்ளங்களின் கொடையாக,
திரும்பிப் பார்க்கிறேன்,
இன்று ஓர் ஆசிரியனாய் மிளிர்கிறேன்,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
திரும்பிப் பார்க்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment