நண்டு கொழுத்தால்
- - - - - - - - - - - - - - - - - - -
நிறைவான அறிவை தெளிவாக்காவிட்டால்,
மனக் கோளாறும் முற்றிடுமே.
தெளிந்த அறிவை பெற்றிடுவாய்,
வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திடுவாய்!
பஞ்சம் பட்டினி நாட்டினிலே,
உண்ணஉணவு நிறைய இருக்கிறதே!
கொள்ளையும் இங்கேநடந்திடுதே - அரசும்
சேர்ந்தே பகடைநாடகம் போடுகிறதே!
ஊழல் செய்த பணம்அது,
மக்களைஏமாற்றி கண்ணில் மண்ணை தூவி, களவாடிய பணம்அது,
அளவுக்கு மீறி சேர்த்திட்டால்
ஆபத்தும் இங்கே வந்திடுமே,
லஞ்சம் அதையும் நீவாங்கிவிட்டால்,
அதிலே நீயும் மூழ்கிவிட்டாய்!
பலநாள் மக்களின் சாபக்கேடு
ஒருநாள் உனக்கு சிறையிருக்கு!
உண்ணஉணவு அதிகம் கிடைத்திடவே,
கொழுத்தநண்டும் வலையைவிட்டு
வெளியேற,
பார்த்த பருந்தும் குறிவைத்திடுமே!
நரி கொழுத்து காட்டில்தங்காமல்
ஒநாயிடம் அகப்பட்டதை போல
கருப்பு பணத்தை பதுக்கிவிட்டால்,
ஒரு நாள் வசமாய் மாட்டிடுவாய்!
______________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment