மெதுவாய் கொல்லும் விஷம் நட்பில்,
------------------------------
மெதுவாய் கொல்லும் விஷம் நட்பில்
புகுந்து விட்டால் ஆபத்து,
புகையிலை போடுபவன் நண்பன்எனில்
புதிய பழக்கம் உன்னைச்சேரும்,
புதிதில் இன்பம் தரும் ,
பிறகு புற்றாய் துன்பம் தரும் ,
மெதுவாய் விஷமாய் உன்னை கொல்லும்.
நல்லவனாய் நீயும் இருந்துவிட்டால்,
தீய நண்பனை நீயும் சேர்க்காதே!
அப்படியே நீயும் கூடிவிட்டால்
மது, மாது பழக்கம் உன்னிடம் கூடும்,
சுருள் சுருளாக விடும் புகையும்
உன்னை நண்பனாக்கிவிடும்,
பிறகு அடிமையாக்கிவிடும்,
பிறகு மெதுவாய் உன்னைக்கொல்லும்,
புறம் கூறும் நட்பும் வேண்டாம்,
துன்பம் தரும் நண்பனும் வேண்டாம்,
தோழிகளை நாடும் தோழனும் வேண்டாம்,
மெதுவாய் கொல்லும்
விஷமாய் மாறும் உறவும் வேண்டாம்,
இறைவா எனக்கு வேண்டுவதெல்லாம்,
எதிர்பார்ப்பில்லாத,
துன்பத்தில் தோள் கொடுக்கும்,
அன்பாய் உறவாடும்,
பாசமிகு நட்பைக் கேட்டேன் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment