தை மகளே வா!
- - - - - - - - - - - - - - - - - - -
தை மகளே வா,
புத்தரிசியிட்ட பொங்கல் படைக்க,
மாக்கோலம் இட்டு வரவேற்கிறோம்,
மாத்தோரணை அணிந்து வரும்,
தைமகளே வந்திடம்மா!
ஆதவன் உதிக்கும் ஒளியாய்,
கோடையில் குளிர்ந்த நிலவொளியாய்,
முழுமதியோன் செங்கதிராய்,
ஓடிவா மகளே, தைமகளே,
சாதிகளை ஒழிக்க வேண்டும்,
மதபூசல்களை தடுக்க வேண்டும்,
பெண்ணடிமையை தகர்க்க வேண்டும்,
வாடிமகளே, என்மகளே!
தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாட,
விளைநிலம் மனை நிலமாக,
பஞ்சம், பட்டினி பாடாய்ப்படுத்த,
தடுக்க நீஓடிவாம்மா,
மாரியாய் நீபூமிக்கு வந்திடம்மா!
வெண்பொங்கல் வைத்து,
இனிக்கும் கரும்பை படைத்து,
அழைக்கின்றோம்,
சர்க்கரை பொங்கல் மணக்குதம்மா!
செந்தமிழின் மகளே ஓடிநீயும் வந்திடம்மா!
தண்ணீர் பிரச்சினை தீர்க்கவேண்டும்,
வன்கொடுமைகளை விரட்டவேண்டும்,
தீண்டாமையை துரத்தவேண்டும்,
ஊழல் அதையும் ஒழித்திடவேண்டும்.
சாந்தம் அதனை அருளவேண்டும்,
சமத்துவம் பெருகவேண்டும்,
பாசம் நிறைவாய் வேண்டும்,
புத்தாண்டில் பிறக்கும் கலைமகளே,
வேண்டியதை தந்திட,
வேண்டாதவை நீங்கிட,
பழையன கழிந்திட,
புதியன புகுத்திட,
அருள்புரிய "தை மகளே வா"டியம்மா!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்பாய் அழைக்கும்
இல.வீரபாண்டியன்
நிருபர், தினத்தந்தி,
பாரதியார் வீதி,
பெரியார் நகர்,
விருத்தாசலம்.
கைபேசி : 99 435 499 13
No comments:
Post a Comment