அக்னி குஞ்சொன்று கண்டேன் செய்யுட் கலை சூடிகை
- - - - - - - - - - - - - - - - - -
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்,
அது பிரிந்துச் சென்றதை கண்டேன்,
ஏழைக்கு எளியவர் நீங்கள்,
வலியவர்க்கு ஏவுகணை நாயகன் நீங்கள்,
எங்களை விட்டு பிரிந்திட்ட உங்களை
பிரித்தது யாரோ?
மாணவர்களின் மணிமகுடமே,
ஆசிரியர்களின் அறிவியல் ஆசானே,
ராமேஸ்வரமும் அனல் கக்கியதே,
உலகம் அன்று இருண்டதே,
கடலும் கண்ணீர் விட்டதே,
உங்கள் வாழ்வு ஒப்பாக,
இங்கு யாரும் பிறக்கவில்லை,
மாணவர்கள் நாங்கள்,
இருக்கின்றோம்,
உங்கள் கனவை நினைவாக்க,
இந்தியா வல்லரசாகிடுமே,
உலகில் இந்தியா மிளிர்ந்திடுமே,
சுடராய் உங்கள் பெயரை
தாங்கி ஒளியும் வீசிடுமே!
நீங்கள் புதைந்த மண்ணிலே,
நாங்கள் விதையாய் விதைக்கப்பட்டோம்,
விருட்சமாய் வளர்ந்திடுவோம்,
மரத்தையும் பல நட்டிடுவோம்,
மாணவர்களின் முன் மாதிரியே .
உங்களுக்கு ஒய்வு தந்தாலும்,
உங்கள் கருத்துக்கள் எங்களை
வைத்திருக்கும் உயிர்ப்புடனே !
- - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment