Wednesday, 22 November 2017

முயற்சி திருவினையாக்கும்

முயற்சியே திருவினையாகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
முயற்சியே திருவினையாகிறது
மனிதா நீயும் சோர்ந்திடாதே,
காலங்கள் கடந்தாலும்
தோல்விகள் பலவந்தாலும்
மனதை சிதறவிடாதே!
ஒவ்வொரு தோல்விதனில்
உன் வியர்வை கரைகள் இருக்க
வெற்றி உன் வசப்படும்
நீயும் கலங்கிடாதே!
முயன்று தோற்றவனே
ஒவ்வொரு தோல்வியும் அனுபவமடா!
பார்வையாளன் பலதை பேசுவான்
மேடையேறியவனே உரக்கப்பேசுவான்,
ஒன்றை இழந்தால் தானே
ஒன்றுக் கிடைத்திடும்
தோல்விதனை நீ அடைந்தால்
வெற்றி உன்னைச் சேரும்,
தோல்வி என்ற படிகளை ஏறியே
வெற்றிக் கனிகளை சுவைத்திடலாம்,
முதல் முயற்சி வெற்றி எனில்
தக்க வைக்க போராடனும்
போராடியே தோற்ற உனக்கு
வெற்றிக் கூட சாதாரணம்
வாழ்க்கையே தோல்வி என
நீயும் எண்ணிடாதே,
முயன்றால் முடியாததும் இல்லை
வெற்றிவெகுத் தூரத்திலும் இல்லை
வெற்றி பயணம் தொடர்ந்திட
தோல்வி பயணத்தை இழந்திட வேண்டும்,
வெற்றி உன் முன்னால் இருக்க
தோல்வி உன் பின்னால் இருக்க
ஓடி நீயும் நின்றிடாதே,
வெற்றிக்கனியை இழந்திடாதே
முயற்சியே திருவினையாகும்
என்றும் நீயும் மறந்திடாதே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment