விவசாயம் காப்போம்,
முதுகெலும்பை மீட்போம்,
எதையும் உருவாக்கலாம்,
அரிசி அதனை
விவசாயி தான் உருவாக்கனும்,
மழை பொய்த்துத்தான் போனது
மரங்களும் தீர்ந்து தான் போனது,
காடு கரம்பாய் போச்சி,
விளைநிலம் மனையாய் ஆனது,
நிலமெல்லாம் வறண்டது,
பயிரெல்லாம் தீய்ந்தது,
தண்ணீர் பாசனம் வேண்டுமே!
கன்னடனும் மறுக்கிறான்,
தெலுங்கன் அவனும் தடுக்கிறான்,
மலையாளி அணையுமே கட்டுகிறான்,
தமிழன் கண்ணீரும் விடுகிறான்,
என்ன வளம் இல்லை - தமிழ்நாட்டில்
ஏன்கையேந்த வேண்டும்வெளிமாநிலத்தில்,
தாமிரபரணி ஊற்றாய் ஒட,
பொய்கைக் கூட சாரளாய் ஆட,
வைகையும் நீண்டு ஒட
தண்ணீர் பஞ்சம் இல்லையே!
மணிமுக்தாறும், வெள்ளாறும்
பறந்து பாய பின்,
ஏன் இந்த வறட்சியே!
தண்ணீரெல்லாம் வீனாய்
கடலில் கலக்க
விவசாயி கண்ணீர் கூட வறண்டு போக,
நிலமெல்லாம் குறுக்கு நெடுக்காய்,
வெடித்து போக, அதனை கண்ட மனம் தாங்காமல் தற்கொலையும் நடக்குது!
ஒரே தீர்வு - நதிகளை இணைக்கனும்
நாமும் அதையே நினைக்கனும்,
தடுப்பணைகளாய் கட்டனும்,
தண்ணீரையும் சேமிக்கனும்.
அரசை நம்பி வீழ்ந்தது போதும்,
விவசாயிகள் ஓரணியில் திரளனும்.
நாமே அதனை செய்யனும்,
இப்படி மட்டும் செய்து விட்டால்
நிலத்தடி நீரும் உயர்ந்திடும்,
மரமும் நட்டு வளர்த்திட்டாள்,
மழையும் தானாய் பெய்திடும்,
வறண்ட நதியெல்லாம் ஊற்றாய் ஓடும்,
விவசாயமும் செழித்திடும்.
தோழர்களே தோள் கொடுங்கள்,
நினைத்ததையும் சாதித்திடுவோம்.
உழவன் மகன்
விருத்தாசலம் இல, வீரபாண்டியன்.
No comments:
Post a Comment