Wednesday, 22 November 2017

மனக் குமுறல்கள்


மனக்குமுறல்கள் .
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தினம் தினம் செத்து மடியும் விவசாயி,
யார் காரணம்,
அரசியல் வாதிகளா, நடிகர்களா,
ஊழல் செய்யும் அதிகாரிகளா?
யாரும் இல்லை,
மக்களாகிய நாம் தான் காரணம்
நம்மிடம் விழிப்புணர்வு இல்லை,
அமைதி இல்லை,
கால்வாயை அரசு தான் தூர்வார
வேண்டும் என நினைப்பது தவறு,
அந்த வேலையை மக்களாகிய நாமே
செய்தால் அதிகாரிக்கு வேலை ஏது,
சான்றிதழ் வாங்கக் கூட லஞ்சம்
யார் காரணம்,
அதற்கென சில விதிகள் உண்டு -நாம்
அந்த விதிகளை மீறியதால் வந்த பயன் அது,
யார் காரணம், மக்களே நாம் தான்காரணம்,
காற்றில் கூட ஊழல்,
யார் காரணம்,
வாக்களித்து மக்களவைக்கு அனுப்பிய
நாமே காரணம்,
மக்களே விழித்திருங்கள்,
என் மனக்குமுறல்களை தீர்த்திடுங்கள்,
எதிலும் விழிப்பாய் இருங்கள்.

No comments:

Post a Comment