கனவோடு மட்டுமா!
- - - - - - - - - - - - - - - - - - - -
கனவோடு மட்டுமா போனது,
காலத்தையும் கடந்துச் சென்றது,
குடிசை வீடுகளை தீயும் தின்றது
தினம்தினம் தீ விபத்தாய்
என்று நிலை மாறுமோ,
வீடுக்கட்டுதல் கனவோடு மட்டுமா போனது!
கல்விக்கற்க பள்ளியும் செல்லவில்லை
தெருவோரம் சிறார்கள் கூட்டம்,
கையிலே திருவோடு ஏந்தியே!
உணவுக்கு அலைகிற கூட்டம்
என்றுதான் உணவு முழுதாய் கிடைக்குமோ!
கனவோடு மட்டுமே போகுமா!
தரணியெல்லாம் செழித்திருக்க,
உணவுக்கும் பஞ்சமில்லை,
கொள்ளையடிக்குது கயவர்கள் கூட்டம்
வயிறுக்காயுது ஏழைகள் கூட்டம்,
என்று ஒழியும் இந்தக்கூட்டம்
கனவோடு மட்டுமா வாழ்ந்திடனும்!
ஊழல் பெருச்சாளிகள் கூட்டம் இங்கே
அதிகரிக்க,
ஏழைகளின் கூட்டம் இங்கே
பெருத்துப் போக,
ஏழைகளின் கண்ணீர் அதிலே
ஊழல்வாதி சுகமாய் குளிக்க,
என்று தனியும் இந்த தாகமோ
அல்லது கனவோடு மட்டும் வாழ்க்கை ஆகுமோ!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment