Wednesday, 22 November 2017

அன்பின் உருவம் அன்னை

அன்பின் உருவம் அன்னை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பத்து மாதம் சுமந்த தாயே!
பாலூட்டி சீராட்டி வளர்த்த நீயே,
கல்லுடைத்தாய் நான் வாழ,
என் மனம் நோகாமல் நோக,

பாலகன் உன் குழந்தையடி ,
பாலுக்குக் கூட ஏக்கமாய்,
சோறூட்ட ஆளும் இல்லை,
பின்னாள் என்னைக் கட்டிக்கொண்டு
கங்காருவாய் சுமந்து சென்றாய்,

பத்து மாதம் கருவில் சுமந்(த)தாய்,
குழந்தையை முதுகில் சுமக்கிறாய்,
சுமப்பது கூட உனக்கு சுகமடி
பாரமாய் நீ நினைக்காததால்
நீ அன்பின் உருவம் அன்னையடி !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment