வாசம் வீசும் பாசம்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
மழைக் கால வாசம் வீசும் - அது
பெற்றெடுத்த தாய் பாசம்.
மகனை(ளை) தாலாட்டி சீராட்டும் நேசம்.
அறிவை புகட்டி, நல்வழிப்படுத்தி,
விரல்களை பிடித்து அழைத்துச் செல்லும்
தந்தையின் பாசம்,
வானவில்லாய் வந்தாய்,
பாசம் தந்தாய், அன்னையாய் வந்தாய்,
மனைவி தந்த பாசம் - பின்
எப்பொழுதும் தேடினேன் ,
எப்பொழுதாவது தேடுகிறேன்,
வாசம் வீசும் பாசத்தால்!
தாயும் தந்தையும் விடுதியில்,
கொஞ்சி பேசிட முடியவில்லை,
மடியில்சாய்ந்து தூங்கிட அனுமதி இல்லை,
மழைக்கால வாசம் போல,
பண்டிகை கால பாசமானது,
பெற்ற தெய்வங்கள் விடுதியில்,
மகனோ அவன் மனைவியின் சிறையில்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
வாசம் வீசும் பாசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment