மயங்குகிறேன் மழைக்காதலியே
- - - - - - - - - - - - - - - - - - - -
மயங்குகிறேன் மழைக்காதலியே!
சட சட என பெய்திடும் மழையில்,
சாரலாய் வந்து மனதில் புகுந்தவளே,
தென்பாண்டியின் சீமையிலே
தேரோடும் வீதியிலே,
மான் போல வந்தவளே,
உன்னை பார்த்த அந்த மேகமும்,
மழையாய் வந்து நுகர்ந்ததடி,
மயில் தோகை விரித்தென்ன பயன்,
இங்கே என் மயில்
மழையின் தூரலில் தோகையின்றி
ஆடிடும் அழகும் என்ன,
தயங்கித்தான் நிற்கிறேன்,
மயங்கியும் போனேன்,
புது மெட்டெடுத்து பாடி வந்தேன்,
வாசமுள்ள மலர் நீயோ,
அடாத மழையில் நீயும் நனையும் போது,
தேனிக் கூட உன்னைச் சுற்றுகிறதே,
என் காதில் வந்து உன் அழகை
ரீங்காரம் விட்டும் சென்றதே,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
மயங்குகிறேன் மழைக்காதலியே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment