Wednesday, 22 November 2017

அன்பு செய்யும் மாயங்கள்

அன்பு செய்யும் மாயங்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தாயிடம் காட்டும் அன்பிற்கு
அவள் தியாகமே பரிசு,
பத்து மாதம் சுமந்தவள்
காலம் முழுவதும் நம்மை சுமக்கிறாள்,

குழந்தையிடம் காட்டும் அன்பிற்கு
அதன் முத்தமே பரிசு
கள்ளம் கபடமின்றி பேசும்
மழலைப் பேச்சே பரிசு,

காதலியிடம் காட்டும் அன்பிற்கு
அவள் உன்னை முழுதாய் நம்பினால்
அதுவே அவள் தரும் பரிசு,
அப்பொழுது ஏற்படும் சுகமே
அன்பு செய்யும் மாயங்கள்,

மனைவியிடம் காட்டும் அன்பு,
அவள் நமக்காக அவளையே
வருத்திக் கொள்வதே அவள் தரும் பரிசு,
பெற்றோரைக் கூட மறந்து
நாமே கெதி எனக் கிடப்பவள்,

நண்பனிடம் காட்டும் அன்பு
தேவையறிந்து தோள் கொடுப்பான்,
எதையும் எதிர்பார்க்காத அன்பு அது.
அன்பு செய்யும் மாயமது
காலனை நெருங்குபவனும்,
உயிர் பிழைப்பான்!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல, வீரபாண்டியன்

No comments:

Post a Comment