தமிழர் பண்பாடும் பொங்கல் திருநாளும்
-------------------------------------------------------------------
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில்
தமிழர்களுக்கு விருந்தோம்பியே பழக்கம்,
உயிர் பிரியும் நேரத்திலும்
கையேந்திய காலங்கள் இல்லை,
தமிழை நம்பி வந்தவரெல்லாம் வாழ்ந்தார்,
வீழ்ந்தவர் எவரும் இலர்.
தலை நிமிர்ந்தே சென்றிடுவோம்
தலைக்குனிந்தால் இன்னுயிரை - மாய்த்திடுவோம்,
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்,
தமிழர்தம் பெருமையை பறைசாற்றும் நாள்,
துன்பம் என்ற பழையனவற்றை போக்கி
இன்பம் என்ற புதியவைகளை - புகுத்திடுவோம்,
போகியை கழித்திடுவோம்,
புது நெல் மணியெடுத்து
உலகிற்கு ஒளி கொடுத்து அருளும்
ஆதவனுக்கு சூரிய பொங்கலிட்டு
நன்றி காணிக்கை செலுத்திடுவோம்,
உற்றத் தோழனாய் உழைக்கும் - மாடுகளுக்கும்
பொங்கல் வைத்து வணங்கிடுவோம்,
கானும் பொங்கலில் கூடி ஆடி - களித்திடுவோம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
தமிழர் பண்பாடும் பொங்கல் திருநாளும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment