நீ மீட்டிய யாழ் கொடுத்த சுரம்
என்னருகில் நிற்கிறது, ஏனோ நீ
மட்டும் என்னை விட்டு தள்ளியே
நிற்கிறாய், உன்னைமட்டும் தேடுது - என் சுரம்
கால் வாக்கில் நடந்தேன் தெருவோரங்களில்
என் நிழலுடன் உன்நினைவும் தொடர்கிறது,
யாழின்இசை மட்டும் என்னை மீட்டுகிறது,
நீ அமைத்த சுரமல்லவா ! அதுதான் காரணம்
பள்ளியின் இறுதியில் தோழியானாய் - நீ
கல்லூரியில் ஆனாய் இசைமீட்டும் மானாய்
என் மனதையும் மீட்டாய் உன் ஒரப் பார்வையால், நான் ஆனேன் இசையாய்
ஆனால் இன்றோ நீ என்
நினைவாய் ஆனாய்- உன்சுரம் ஒன்றே
நீ எனக்கு தந்த வரம்
அதுவே என் நினைவின் பாரம்
பலரை பார்த்துவிட்டேன், இருந்தும் உன்னை
மட்டும் கனவாகவே நினைத்ததன் பயனாய் வாழ்ந்திட்டேன், நீ இல்லாமல் நான்
பித்தாகக் கிடந்து வாழ்ந்தென்ன பயன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
No comments:
Post a Comment