நாதிந்தின்னா_நாதிந்தின்னா
அவள்சூடும் மல்லிகை நானா,
உன்கூந்தல் வாசனை வந்தது தானா,
நான்வாடித்தான் போகிறேன் தானா!
வாசமுள்ள மனமும் நீதானே !
தென்பாண்டியின் தேனும் நான்தானே!
சிந்துதே செவியில் அமிர்தம்தானே.
தந்தானே உன்னை நினைக்கையில் மாமனே!
ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னோடுதானே,
பின்நினைத்தாலும் உன்நினைவில் நானே,
வாழ்ந்திட்டேனே மானே!
உன்னைநினைத்து உருகிட்டேனே!
இசையை மீட்க சுரமிருக்கு,
சுரத்தைமீட்க யாழும் இங்கிருக்கு
என்னைவாசிக்க நீஇருக்கியே
என்மாமனே !
தாலாட்டுப்பாட நீயிருக்கும்போது - நான்
அதனை ரசித்திருக்கும் தருணம்,
பாலும்பழமும் பக்கத்திலே இருக்குதே,
மாமனையும் நீ ரசித்துப்பார்க்க
உன்தாவணியும் விலகி என்னைப்பார்க்க
உன்வெட்கம் என்னை கொல்லுதடி,
உணர்வுகளும் தள்ளுதடி,
ஏமாமா நீயும் பொறுத்துக்கிட்டு
வேட்டியமடித்து கட்டிக்கிட்டு
தென்னந்தோப்பு வந்தீங்கன்னா,
இளநீரும் குடிக்கலாம்,
பப்பாளி பழமும் தின்னலாம் என்மாமனே ,
தித்தா_திகுதிகு_தித்தா_திகுதிகு நான்தகிட திந்தோம் தித்தா.
------------------------------------
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment