கிராமியக் கவிதை
- - - - - _____________________
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆசை முத்தம் தாடிப்புள்ள!
மாமன் மகன் நானும் வந்தேன்,
தேடி நீ ஓடி வாடிப்புள்ள,
ஆத்துப் பக்கம் போகலாம்,
காதல் கதை பேசலாம்,
கம்மாங்கரைக்கு போகலாம்,
வாழ்க்கை கதைப் பேசலாம்.
உன் நெஞ்சில் சாய ஆசையடி,
மடியில் உறங்க ஆசையடி,
உன்னைத் தழுவ ஆசையடி,
முத்தம் கொடுக்க ஆசையடி!
அத்தை மகன் காத்திருக்கேன்,
தென்றலாய் நீ ஓடி வாடி,
ரோசாப் பூ வாங்கி வந்தேன்,
சாரலாய் நீ தழுவி வாடி,
ஏக்கம்கொள்ள வைக்காதடி,
மாமன் மனசு தாங்காதடி,
பாசம் உள்ள பாண்டியனடி,
தாய்போல காப்பேனடி,
சென்னையில் பிறந்த சிங்காரியே!
கடைக்கோடியில் வளர்ந்த குமாரியே!
பொதிகை மலையின் தேனே!
அகத்திய மலையின் செந்தமிழே!
அரசன் மட்டும் காத்திருக்கேன்,
அரசி உன்னைக் காணவில்லை,
கனவுகள் நானும் கண்டேனடி,
உன்னை கண்போல காப்பேனடி
நீயும் ஓடி வந்துப்புட்டா,
முத்தம் ஒன்னு கொடுத்துப்புட்டா,
பலநாள் ஏக்கம் தனியுமடி,
ஆசைக்கொள்ள வைக்காதடி,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment