Wednesday, 22 November 2017

நதியில்லாத ஓடம்

நதியில்லாத ஓடம்
__________ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _-_-_-_-
ஓ மனிதனே,
உன் செயல்கள் யாவும் நலமா?
உன்னை திருத்த முடியாதா,
உனக்கு ஓர் எல்லையில்லையா!

நீர் நிலைகளை ஆக்கிரமித்தாய்,
நிலங்களையும் வீடாக்கினாய்,
காடுகளை அழித்தாய்,
உன் செயல்கள்
உனக்கே நியாயமாக தெரிகிறதா!

உன் ஈனச் செயலால்
பருவக் காலங்கள் மாறியதே,
மழையும் பொய்த்ததே,
பஞ்சம் நீடிக்குதே!
அழிவுகள் நிலையானதே!

மக்களை ஏமாற்றுகிறாய்,
மனிதனாய் வாழ மறுக்கிறாய்,
அடுத்தவனிடம் கையேந்தி நிற்கிறாய்,
மானத்தை பறக்க விட்டாய்!

ஊழலை வளர்த்து விட்டாய்,
லஞ்சத்திற்கும் வித்திட்டாய்,
கொலைகளை செய்திட்டாய்,
கொள்ளையும் அடித்து விட்டாய்,

இன்னும் என்னச் செய்வதாய் உத்தேசம்,
மக்கள் திண்டாடுவதை பார்க்கலையா,
உண்டி, உறவிடம் இல்லாததை காணலையா,
நதியில்லாத ஓடமாய்,
வழிகாட்டி இல்லாத மக்களால்
நாடு திசைமாறி செல்கிறதே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்'

No comments:

Post a Comment