Wednesday, 22 November 2017

எங்க ஊரு சந்தையில

எங்க ஊருச் சந்தையில
- - - - - - - - - - - - - - - -
கிராமியக் கவிதை சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எங்க ஊருச் சந்தையில்
       சாதிசனம் பார்க்கமாட்டோம்
ஆணு பெண்ணு எல்லாம் கலந்து
      காய்கறிய வாங்கிப் புடுவோம்.

தக்காளி தங்கம் விலை விக்கையில
   வெங்காயம் சொன்ன விலை
நெஞ்சு வெடிச்சி போகுதடி
       தாரு மாறா விலை ஏறித்தான் போச்சுதடி

பாலு வாங்க நான் போனேன்
     பாதாளத்துல விழுந்தேனடி,
அரிசிப் பருப்பு வாங்கப் போனேன்
   பருப்பு வைரம் விலை விக்குதடி

உருளைக் கிழங்கு வாங்கி வந்தேன்
    உருளைக்குள்ள கவிழ்ந்தேனடி,
மிளகாத்தூள் வாங்கி வரையில
    கண்ணுல தண்ணி வந்ததடி

மிளகு சோம்பு விக்குதடி
    வாங்கத் தான் பணமில்லே
நீக்கொடுத்த நூறு ரூபாய்
    கிலோ அரிசி மட்டும் வாங்கி வந்தேன்,

தங்கம் கூட வாங்கிடலாம்
     காய்கறிய வாங்க முடியாதடி -நம்ம ஊரு சந்தையில் விலை ஏறிப்போச்சுதடி
   அதனால இப்போ  விருச்சோடிக் கிடக்குதடி

பொழுது சாய்ஞ்சி நாமப் போன
     குறைந்த விலைக்கு வாங்கிடலாம்
இல்லாட்டி பச்ச மிளகாய் வாங்கி வாரேன்
    பழையக் கஞ்சி குடிக்கலாமடி
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment