விழிகளின் ஏக்கத்தையே
தொடர்ந்து பார்த்தோம்,
பசியால் மாண்டவரை பார்த்தோம்,
பட்டினியால் வெந்தவரைப் பார்த்தோம்,
இரக்கம் இல்லாதவரையும் பார்த்தோம்
ஊழல் மட்டுமே வாழ்க்கையாய்,
உறுதி கொண்டவர்கள் வாழ்க்கையிலே
பணம் மட்டுமே குறிக்கோளாய்
அலைந்து திரிபவரை பார்க்கிறோம்.
வாழ்ந்தவர் வீழ்ந்தனர்,
வீழ்ந்தவர் எழுந்தனர்,
கையேந்தும் கூட்டம்
எப்பொழுது மறையும்,
உடையின்றி திரியும் கூட்டத்திற்கு
மாற்றங்கள் வருவது எப்பொழுது,
மலம் அள்ளுபவருக்கு
அது என்ன குலத்தொழிலா?
குப்பை அள்ளியவனுக்கு
மாற்றம் வராதா?
கழிவுநீர் கால்வாயில் இறங்கியவனுக்கு
ஏற்றம் என்பதே இல்லையா!
வறுமை அதுதான்
இந்தியாவின் பெருமையா!
மாற்றம் வேண்டி ஆட்சியை மாற்றினோம்,
காட்சிகள் மட்டும் மாறவில்லையே,
மாற்றம் கனவில்தான் வருகிறது
என்று கிடைத்திடும் மாற்றம்
என்று கோர்வைகள்
ஆகும்
பல விரல்கள் ஆறுதல் கூற பின்
___________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment